உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

243

எனவும் ஓதினார்; இங்ஙனம் ஓதுகின்றுழி, ஏனை எல்லாத் தேவர்களும் சிவபிரானுக்கு ஒரோவொரு கருவியாய் அமைந்தாற்போலத் திருமாலும் அவரது வில்லில் ஓர் அம்பாக அமைந்தனர் எனக் கூறியவாற்றாற் சிவபிரானே எல்லாவற்றையும் இயக்கும் முழுமுதற் கடவுளாதலும், திருமாலும் மற்றைத் தேவர்களும்அவன் இயக்கினால் இயங்கும் உயிர்களாதலும் திருமங்கையாழ்வார்க்கும் உடம்பாடாதல் பெற்றாம். இன்னுந், தாம் சாவாமைப் பொருட்டு அமிர்தம் எடுப்பான் வேண்டிக் கடைந்த பாற்கடலுட்பிறந்த நஞ்சால் தேவர்களெல்லாரும் படுசாம்பராய் வெந்து அவியாமைப் பொருட்டுச் சிவபிரான் தானே அந்நஞ்சினைப் பருகிய வரலாற்றினையும் திருமங்கை யாழ்வார் உண்மையென உடம்பட்டு,

66

"அண்ணல்செய் தலைகடல் கடைந்ததனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே

(6, 1, 2)

என்று கூறுமாற்றால், தேவர்க ளெல்லாருந் தாஞ் சாவாமைப் பொருட்டு அமிர்தம் வேண்டினராகச் சிவபிரானோ எல்லாரையும் நீறாக்கும் நஞ்சினை யுண்டும் இறவாதிருந்தனன்; அதனால் அவனே முழுமுதற் கடவுளாதல் அவர்க்கும் உடம்பாடாயிற்று. இன்னும், தக்கன் ஆற்றிய வேள்வியில் திருமாலையுள்ளிட்ட தேவர்களெல்லாரும் சிவபிரானைநீக்கி அவ் வேள்விக்கண் அவியுணர்வுபெற்ற இறுமாப்பினை ஒழித்தற்பொருட்டு இறைவன் அவ் வேள்வி நிலையினைக் குலைத்த வரலாற்றினையுந் திருமங்கை யாழ்வார்,

“தக்கன்வேள்வி தகர்த்த தலைவன்”

(5, 2, 6)

றைவனான

என்று கூறுமாற்றால், எல்லாம் வல்ல சிவபிரானைவிட்டுச் செய்யும் நல்வினைகளுந் தீவினைகளாம் என்பதனை அவர் தாமும் உடம்பட்டாராயிற்று. இவ்வாறு இருக்குவேதம்முதற் றிருமங்கையாழ்வாரது ‘பெரிய திருமொழி' றுதியாகவுள்ள எல்லா நூல்களானுஞ் சிவபிரானே முழுமுதற்கடவு ளென்பது துணியப்படுதலின், மக்கட் கூட்டத்தவரில் ஒருவனாய்த் தேவகியின் கருப்பையிற் றங்கிப் பிறந்து, ஜராசந்தனுக்கு அஞ்சித் தான் முன்னிருந்து மதுரையை விட்டுப்போய்த் துவாரகையைத் தனக்குத் தலைநகராக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/252&oldid=1588709" இலிருந்து மீள்விக்கப்பட்டது