உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

  • மறைமலையம் - 23

விளக்கினாம். தென்னாடு வடநாடுகளில் உள்ள திருமால் திருப்பதிகடோறுஞ் சென்று ஆங்காங்கு இவர் திருப்பதிகங்கள் பாடியிருத்தலாலும், இவருடைய பாட்டுக்களே ஏனையாழ் வார்களின் பாட்டுக்களைவிட மிகுதியாயிருத்தலாலும் இவர் நீண் காலம் உயிரோடிருந்த வராகக் காணப்படுகின்றார். இவர் திருவரங்கப்பெருமாள் கோயிற்குச் சென்ற போது, தாண்டரடிப்பொடி யாழ்வார் அங்கே திருத்தொண்டு செய்துகொண்டிருத்தலைக் கண்டு அவரை வணங்கிச்சென்றார் என்று வைணவப்புலவர்கள் கூறும் உரை உண்மையாக இருக்கலாம். இவர் தொண்டரடிப் பொடியைக் கண்ட நாளில் அவர்ஆண்டில் மிக முதியராயும், இவர் இளையராயும் இருந்தாராகல் வேண்டும். இவர் இராமாயண கதைவழிப் புகுந்த வடசொற்களையும் பெயர்களையும் தம்முடைய செய்யுட்களில் மிக எடுத்தாண்டனராயினும், தமது காலத்தில் வழங்கத் துவங்கிய கொச்சைத் தமிழ்ச்சொற்கள் தம்முடைய பாடல்களில் விரவ இடங்கொடுத்திலா. 'மனிசர்' ‘பொங்கத்தம் பொங்கோ" முதலான இழிசினர் வழக்குச் சொற்கள் சில, செந்தமிழ் வளந்துறுமி விளங்கும் இவர்தஞ் செய்யுட்களினும் ஒரோவழி நுழைந்துவிட்டமையினை உற்றுநோக்குங்கால், இவர் ஆண்டில் முதிர்ந்த காலத்திற் கொச்சைத் தமிழ்ச் சாற்கள் மிக வழங்கலாயினவென்பது புலனாம். இவர் சிவபெருமானை ஒரோவழி இகழ்ந் துரைப்பினும், பொய்கை யாழ்வார் பேயாழ்வாரைப் போல் வரவர மெய்யறிவு விளங்கப்பெற்றுச், சிவமுந் திருமாலும் ஓருருவினராய் விளங்கு மாற்றைப் பலகாற் பாடியிருத்தலை மேலே எடுத்துக் காட்டினாம்.

இனிப், பெரியாழ்வாரும் அவர் தம் புதல்வியார் சூடிக்கொடுத்த நாச்சியாரும் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தாராதலை மேலே விளக்கிக் காட்டினாம். இவர்களுடைய பாடல் களில் வடசொற்களுங் கொச்சைத் தமிழ்ச் சொற்களும் ஏராளமாய் விரவின. திருமங்கையாழ்வார் தம் பாட்டுக்களிற் போலப் பெரியாழ்வார் தம் பாட்டுக்களிலும் பரசுராமனுங் கற்கியுந் திருமாலின் பிறப்புக்களாகக் கொண்டு வழுத்தப்படுதலின், அவரும் இவரும் இவர் தம் புதல்வியாரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/263&oldid=1588720" இலிருந்து மீள்விக்கப்பட்டது