உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

253

இனி, குலசேகரப்பெருமாள் தாம் இயற்றிய "தேட்டருந் திறல்” என்னும் பதிகத்தின் இரண்டாஞ்செய்யுளில், “ஆடிப் பாடி அரங்கவோ என்றழைக்குந் தொண்டரடிப் பொடி” எனத் திருவரங்கப் பெருமாள்கோயிலிலில் திருத்தொண்டு செய்துகொண்டிருந்த தொண்டரடிப் பொடியாழ்வாரைக் குறிப்பிட்டிருத்தலிற், குலசேகர ஆழ்வாருந் தொண்டரடிப் பொடி யாழ்வாரும் ஒரேகாலத்தினரென்பது பெற்றாம். தொண்டரடிப்பொடியாழ்வார் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து பத்தாம் நூற்றாண்டின் துவக்கம்வரையில் இருந்தாராகற்பாலார். இவர் "புலையற மாகிநின்ற புத்தொடு சமணமெல்லாம்” என்று இறந்த காலச்சொல்லாற் கூறுதலிற் புத்த சமண மதங்களின் வலி சைவசமய ஆ சிரியரால் ஒடுங்கியபின் இவர் இருந்தமை பெறப்படும். இவர் பாடிய 'திருப்பள்ளி யெழுச்சி' 'புத்த சமயங் கிளர்ச்சிபெற்ற கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலிருந்த மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த 'திருப்பள்ளி யெழுச்சி'யைப் பார்த்தே பாடப்பட்டதாகு மென்பதூஉம், இவர் திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்த தேவாரப் பாக்களையும் நன்கு பயின்று அவற்றைப்போற் சில பாடினாரரென்பதூஉம் விளக்கிக் காட்டியிருக்கின்றேம். தொண்டரடிப் பொடியாழ்வார் சிவபெருமானை யாண்டும் இகழ்ந்திலர்.

இனித், திருமழிசையாழ்வார் பாடல்களிற் புதிது புகுந்த வடசொற்களேயன்றி, இழிசினர் வழக்குஞ் சொற்களும் ஏச்சுரைகளுஞ் சிவபிரானைப் பழித்தலும் நிரம்பி யிருத்தலின் இவர் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தாராவர். இதனை முன்னரே விளக்கிப் போந்தாம். திருப்பாணாழ் வாரும் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்த வராகவே காணப்படு கின்றார். இப்பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்த திருமழிசை யாழ்வார் திருப்பாண் ஆழ்வார் பாடல்களினுங் கூடப் பரசுராமன், கற்கி என்பவர்மேற் பாடப்பட்ட செய்யுட்கள் காணப்படுகின்றில.

இனித், திருமங்கையாழ்வாரது சிறப்புக்காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தை யடுத்துவந்த தொன்றாகும் என்பதனைப் பலவாற்றானும் ஆராய்ந்து முன்னரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/262&oldid=1588719" இலிருந்து மீள்விக்கப்பட்டது