உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

  • மறைமலையம் - 23

கொல்லிகாவலன் மாலடி முடிமேற்

கோலமாங் குலசேகரன்

எனவும்,

கோழியர்கோன் குடைக் குலசேகரன்

(7.11)

(9, 11)

எனவும் இவர் தம்மைத்தாம் பாடிய பதிகங்களின் ஈற்றிற் சொல்லிக்கொள்ளுமாற்றால் விளங்காநிற்கும். இவர் தம்முடைய பாட்டுக்களில் இராமனை மிகுத்துப் பாடுதலோடு, இராமாயண கதையையுந் தமது பத்தாந்திருமொழியிற் சுருக்கமாக முழுதுமெடுத்துக் கூறியிருக்கின்றார். இராமன் நாடுதுறந்து காடுஏக அதனைப் பொறாது தசரதன் புலம்பியதாக இவர் பாடியிருக்கும் ஒன்பதாந் திருமொழி கற்பார் உள்ளத்தைக் கரைக்குந் தகையதாயிருக்கின்றது. இவர் இராமனிடத்து அளவுகடந்த அன்புடையரென்பது இவர்தம் பாடல்களால் நன்கறியக் கிடத்தலின், முதன்முதல் இவரது முயற்சியினாலேயே இராமாயணகதை இத்தென்றமிழ்நாட்டிற் பரவ, இராமனுந் திருமாலின் அவதாரமாய்த் தெய்வமாக வைத்து வணங்கப்படு வானாயினன் என்க. இவரது காலத்தில், 'துதம்,’ ‘தும்புரு, ‘நாரதன்’, ‘நரகாந்தகன்’, ‘உருப்பசி', 'மேநகை', 'தாமோதரன்’, இராகவன்”, ‘மனிசர்’, முதலான வடசொற்களும், 'தயரதன்’, ‘மைதிலி’, ‘பரதன்’,தாசரதீ’, ‘அயோத்தி”, 'சீராமா’, 'காகுத்தன்’, ‘கைகேசி’, ‘கௌசலை', 'கேகயர்', 'சுமந்திரன்’, ‘சுமத்திரை’, ‘தாடகை’, ‘குகன்’, ‘விராதை’, 'கரன்’, 'தூடணன்', 'வைதேகி', இலக்குமன்' முதலான இராமாயணகதைப் பெயர்களும் இவர் தம் பாடல்களிற் புகுந்து, அவ் வழியே தமிழிலும் வழங்கலாயின. இவர் சிவபெருமானை மிக இகழ்ந் திலரேனும், இந்திரன் பிரமன் முதலான தேவர்களோடு ஒப்பவே அவரை வைத்திருக்கின்றார். அதனால் இவரது காலத்தில் இராமாயண வழிவந்த புதிய வைணவம் கிளர்ச்சிபெற்றுப் பரவலானமை புலனாம். பரசுராமனாவது கற்கியாவது திருமாலின் அவதாரங்களாக வைத்து இவரால் வழுத்தப்படாமையால், இவ் விருவகை யவதாரங்களும் இவரது காலத்துங்கூட க 6 வைணவத்தில் நுழையவில்லை யென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/261&oldid=1588718" இலிருந்து மீள்விக்கப்பட்டது