உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251

20. பன்னீராழ்வார்களின் காலவரையறை

திருமங்கையாழ்வார் காலத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியின் முடிபாக ஆழ்வார்கள் இருந்த காலவெல்லைகள் ஐயுறவுக்கு இடனின்றிப் பின்வருமாறு வரைறுக்கப்படும்: பொய்கை, பேய், பூதம் என்னும் முதலாழ்வார் மூவரும் சைவசமயாசிரியரிற் பிற்காலத்தவரான சுந்தரமூர்த்தி நாயனார்க்கு முன்னும், திருஞானசம்பந்தப் பெருமானுக்குப் பின்னும் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தோராவர்; இம் மூவருட் பொய்கையாழ்வாரும் பேயாழ்வாரும் ஒருகாலத்தினரென்பதும் பூதத்தாழ்வார் அவ்விருவர்க்கும் சிறிது பிற்பட்டவரென்பதும் அறியற் பாலன. பொய்கையாழ்வாரும் பேயாழ்வாரும் சிவபெருமானை யிகழாமையோடு, சிவத்தையுந் திருமாலையும் ஓருரு வினராக வைத்து வழிபட்டிருக் கின்றனர். பூதத்தாழ் வாரோ அவ்விருவரையும் அங்ஙனம் ஓருருவிற்கொண்டு வணங்காமையோடு, 12, 17, 63, 69 ஆம் பாட்டுக்களிற் சிவபிரானை இகழ்ந்தும் பாடியிருக் கின்றார்; இதனால், இவ்வாழ்வார் காலத்தில் வைணவம் சைவத்தின் வேறாய்ப் பிரிந்து சிறிது தலையெடுக்க லாயிற்றென்பது புலனாம். என்றாலும், பூதத்தாழ்வார் இருந்த கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இராமாயணகதையும், நடுவரையில் இராமனைப் பெரிது வணங்கும் வணக்கமும், பரசுராமன் கற்கி என்பாரைத் திருமாலன் பிறப்பாகவைத்து வழிபடுதலும் உண்டாகவில்லை.

இனி, இம் முதலாழ்வார் மூவர்க்குப்பின் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிற் சுந்தரமூர்த்திநாயனார் திருக்கைலை சென்ற சில ஆண்டுகளுக்குப்பின் குலசேர ஆழ்வார் இருந்தாராகற்பாலார். இவர் சேரர்குடியைச் சேர்ந்த ஒரு சிற்றரசர்; கொங்குநாட்டிலுள்ள கொல்லிக் கூற்றத்தையும், 'கோழி' எனப்படுவதாகிய உறையூரையும் ஆண்டவரென்பது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/260&oldid=1588717" இலிருந்து மீள்விக்கப்பட்டது