உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மறைமலையம் - 23

பண்டையோர் தம் செய்யுள் நடையை ஒத்திருத்தலும், தமிழறிவு மிக்கார்க்குத் தெற்றென விளங்காநிற்கும். இன்னும் இங்ஙனமே நாச்சியார் பாடிய குயிற்பத்தில் உள்ள,

சார்ங்கம் வளைய வலிக்குந் தடக்கைச் சதுரன் பொருத்தம் உடையன்

நாங்கள் எம்மிலிருந்த தொட்டிய கச்சங்கம் நானும்அவனும் அறிதும்

தேங்கனி மாம்பொழிற் செந்தமிழ் கோதுஞ் சிறுகுயில லேதிருமாலை

ஆங்கு விரைந்துஒல்லை கூகிற்றி யாகில் அவனை நான் செய்வன காணே

என்னுஞ் செய்யுளோடு,அடிகள் அருளிச்செய்த,

தேன்பழச் சோலை பயிலுஞ்

சிறுகுயிலேஇது கேள்நீ

வான்பழித் திம்மண் புகுந்து

மனிதரை யாட்கொண்ட வள்ளல்

ஊன்பழித் துள்ளம் புகுந்தென்

உணர்வது ஆய வொருத்தன்

மான்பழித் தாண்டமென் நோக்கி மணாளனை நீவரக் கூவாய்

என்னுஞ் செய்யுளை

ஒப்பிட்டுநோக்குக.முன்னையது

பின்னைநாட் டமிழ்நடையும், பின்னையது சுவைமுதிர்ந்த முன்னைநாட் செந்தமிழ் நடையும் வாய்ந்து தம்மிலே வேற்றுமை காட்டி நிற்றல் காண்க. இவ்வாற்றால், 'திருவாசகம்’ காலத்தால் மிக முற்பட்ட செந்தமிழ்வளங் கெழுமிய தாதலும், நாச்சியார் 'திருமொழி' வடசொற் கொச்சைத் தமிழ்ச்சொல் விரவிப் பிற்பட்ட காலத் தமிழ் நடையினதாதலும் செந்தமிழறிவு வாய்த்தார்க் கெல்லாம் எளிதில் விளங்காநிற்கும். இவரும் இவர் தந்தையார் பெரியாழ்வாரும் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்திருலிருந்துஅதன் நடுக்காலம் வரையில் இருந்தாராகல்

வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/265&oldid=1588722" இலிருந்து மீள்விக்கப்பட்டது