உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

L

257

இனி, நம்மாழ்வார் என்னும் சடகோபர் மேற்காட்டிய ஆழ்வார்கள் எல்லார்க்கும் பிற்பட்டவராய்க் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் ஈற்றில் இருந்தவராவர். இஃது எற்றாற் பெறுதுமெனின், இவர்க்கு முந்திய ஆழ்வார்கள் பாடலிற் காணப்படாத, கொச்சைத் தமிழ்ச்சொற்களும், சொற்றிரிபுகளும், இலக்கண வழுவான தமிழ்ச்சொற்களும் இவர் தம் பாடல்களில் மிகப் புகுந்திருத்தலால் இவர் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் ஈற்றிலாதல், அல்லததற்குச் சிறிது பின்னேயாதல் இருந்தாராகல் வேண்டுமென மேலே விளக்கிக் காட்டினாம். இவர் பாடல்களிற் காணப்படும். ‘கீர்த்தித்து’ ‘சுண்டாயம்’ ‘வெளுமை', ‘சம்மதித்து’, ‘பிராக்கள்’, ‘இன்றிக்கே’ முதலான சொற்கள் மேலே காட்டிய ஆழ்வார் எவர் பாடலினுங் காணப்படா. இச்சொற்களுள்ளும் இறுதிக் கண்ணதாகிய 'இன்றிக்கே' (5,2,11) என்னும் இலக்கணம் வழுவான சொல், நாலாயிரப் பிரபந்தச் செய்யுட்களுக்கு வடசொற் கலந்த உரையெழுதிய பெரியவச்சான் பிள்ளை, 'குருபரம்பராப்பிரபாவம்' எழுதிய பின்பழகிய பெருமாள்ஜீயர் முதலாயினார் உரைகளில் மட்டுமே காணப்படுகின்றது. அதனால், நம்மாழ்வார் இவ் வுரைகாரர்களின் காலத்தை யடுத்துச் சிறிது முன்னே யிருந்தாராதல் வேண்டும். சடகோபர் காலத்து வைணவர் குழுவிலேதான் பிராக்கள் ‘இன்றிக்கே’ முதலான வழுச்சொற்கள் வழங்கத் துவங்கினவாதல் வேண்டும். ஏனென்றால், கொச்சைத் தமிழ்ச்சொற்களை ஏராளமாய்த் தம் செய்யுட்களிற் புகுத்திப் பாடிய பெரியாழ்வாரும் அவர் தம் புதல்வியார் சூடிக்கொடுத்த நாச்சியாரும், சடகோபர் காலத்திலாதல் அல்லதவர்க்குப் பின்னராதல் இருந்தனராயின், ச் சொற்களைத் தாமும் தம் பாடல்களில் எடுத்தாளாது ராராகலினென்க. எனவே, நம்மாழ்வார் மேலே காட்டிய ஆழ்வார்கள் எல்லார்க்கும் பின்னிருந் தவரென்பதே திண்ணமாம். வைணவமதம் பெரிதுங் கிளர்ச்சி பெற்றதும், அதனால் திருமால் கோயில்கள் ஆங்காங்கு அமைக்கப்பட்ட லானதும், வைணவர்கள் சிவபெருமானை மிக இழித்துப் பேசலானத மெல்லாம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் ஈற்றிலிருந்து நிகழ்ந்தமை யினாலேதான், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார் முதலியோர்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/266&oldid=1588723" இலிருந்து மீள்விக்கப்பட்டது