உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மறைமலையம் - 23

இன்னிலை'யின் இடையிடையே காணப்படும் ஐந்தடி ஆறடியான் வந்த அளவியல் வெண்பாக்களைப் போன்றது ஒன்றாயினும் ஆழ்வாரது திருவந்தாதியிற் காணப்படுகின்றிலது. 'இன்னிலை'யில் மூன்றடியான் அமைக்கப்பட்ட

6

குறு

வண்பாக்களும் உள; அத்தகைய குறுவெண்பாட்டு ஒன்றாயினும் பொய்கையாழ்வரது திருவந்தாதியில் உளதோ வனின், அதுவும் இன்று.இனி, நாலடி வெண்பாக்களிலும், இரண்டாம் அடியின் ஈற்றில் தனிச் சொல்லின்றி நான்கடியும் ஓர் எதுகைப்பட வந்தவை பல களவழி'யிலும், 'இன்னிலை'யிலும் இடையிடையே விரவி நின்றாற்போல, ஆழ்வாரது திருவந்தாதியிலும் அப்பெற்றியன சிலவேனும் உளவோவெனின், அவை தம்முள் ஒன்றுதானும் அதன் கண் மருந்துக்கும் அகப்படுகின்றிலது. பொய்கையாழ்வாரது திருவந்தாதி யிலுள்ள வெண்பாப் பாட்டுக்கள் முற்றும், பிற்காலத்தார் சய்த 'யாப்பருங்கலம்’, 'யாப்பருங் கலக்காரிகை க முதலான செய்யுளிலக்கணங்களிற் சொல்லப் பட்ட நேரிசை வெண்பா இலக்கணம் ஒன்றேயுடையவாய் ஓரோசைப்பட நடக்கும் இயல்பினவாயிருக்கின்றன. பொய்கையாழ்வாரேயன்றி, அவரோடு ஒரு காலத்தினரான பேயாழ்வார் பாடிய மூன்றாந் திருவந்தாதிச் செய்யுட்கள் நூறும், பூதத்தாழ்வார் பாடிய இரண்டாந் திருவந்தாதிச் செய்யுட்கள் நூறும் அங்ஙனமே முதலிரண்டிடயின் முதற்சீரும் இரண்டாம் அடியின் இறுதிச்சீரும் ஓரெதுகையாய்ப், பின், ரண்டடியின் முதற்சீர்கள் வேறோர் எதுகைப்படநிற்க வரும் நேரிசைவெண்பா இலக்கணம் ஒன்றேயுடைய வாயிருக்கின்றன. மேலே காட்டியவாறு, கடைச்சங்க காலத்துச் சான்றோர் இயற்றிய வெண்பா நூல்களிற் காணப்படும் பல்வேறு வகையான வெண்பாயாப்பின் அமைதிகள், இம் முதலாழ்வார் மூவரும் இயற்றிய வெண்பா அந்தாதிகளிற் சிறிதுங் காணப்படுகின்றில.

அதுவேயுமன்றிக், 'களவழி” 'இன்னிலை' என்னும் சங்ககாலத்துப் பொய்கையாரின் நூல்களிற், பன்னிரண்டு மெல்லோசை வடசொற்களே முறையே சிறுவரவனவாய் விரவிக் காணப்படாநிற்கப், பொய்கையாழ்வாரது

முதற்றிருவந்தாதியில் வல்லோசை வாய்ந்த வடசொற்களும், கடைச்சங்கச் சான்றோர் இலக்கியங்களிற் காணப்படாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/273&oldid=1588730" இலிருந்து மீள்விக்கப்பட்டது