உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

265

வடசொற்களும் ஆகஅறுபத்து மூன்ற விரவியிருத்தலை மேலே யெடுத்துக்காட்டினாம்; பொய்கையாழ்வாரது அந்தாதியிற் போலவே பேயாழ்வாரது திருவந்தாதியில் அறுபத்தாறு சொற்களம், பூதத்தாழ்வாரது திருவந்தாதியில் அறுபத் தெட்டு வடசொற்களுங்கலந்து காணப்படுகின்றன. சங்க காலத்துப் பொய்கையார் நூல்களாகிய 'களவழி' 'இன்னிலை' என்னும் இரண்டிலும் பன்னிரண்டு பன்னிரண்டு வடசொற்களே கலந்திருத்தலையும், கி.பி.எட்டாம் நூற்றாண்டிலிருந்த பொய்கைபேய் பூதம் என்னும் ஆழ்வார் மூவர் பாடல்களிலும் அறுபத்துமூன்று முதல் அறுபத் தெட்டுவரையிலுள்ள வடசொற்கள் கலந்திருத்தலையும் உற்றுநோக்க வல்ல நுண்ணறிவாளர், அவ்வடசொற் கலப்பு வேறுபாடு அவ்வவர் காலவேறுபாட்டினையும் இனிது விளக்கிக்

இருந்த

காட்டுமென நன்குணர்ந்து கொள்வரென்க.

ன்னும், ‘இன்னிலை' பாடிய பொய்கையார், ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய இலக்கணத்தின்வழி நூல் செய்தவர் என்பதற்கு, அவர் அந்நூலின்கட் சில வெண்பாக்களில் ஐஞ்சீரடியும் வரத்தொடுத்தமையே சான்றாம். 'இன்னிலை" அறத்துப்பால் ஏழாஞ் செய்யுளில் “நாம்மீட்டு, ஒறுக்கொணா ஞாங்கர் அடிப்பட்ட சீம்பால்" எனவும், பொருட்பால் ஒன்பதாஞ் செய்யுளில் “யாம் வெறுக்கை இன்றி அமையாராம் அஃதிலார் மை ஆவின்” எனவும், இன்பப்பால் ஐந்தாஞ் செய்யுளில், “அழுக்குடம்புச் சீழ்நீரான் யாத்தசீர் மெல்லியலை யாண”எனவும் ஐஞ்சீரடிகள் வந்தமை காண்க. இங்ஙனம் வெண்பாவினுள் ஐஞ்சீரடியும் ஒரோவழி அருகிவரப் பெறு மென்பது,

வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும் ஐஞ்சீ ரடியும் உளவென மொழிப

எனத் தொல்காப்பியத்துச் செய்யுளியல், 63 ஆம் சூத்திரத்தானும், அதற்குப் பேராசிரியரும் நச்சினார்க் கினியருங் கூறிய உரையானும் பெறப்படும். யாப்பருங்கலக்காரிகை யாசிரியரும் அதன் உரைகாரரும், “அருகிக் கலியோடு அகவல் மருங்கின் ஐஞ்சீரடியும், வருதற்கு உரித்தென்பர். என்னுங் காரிகையில் (ஒழிபியல், 5) வெண்பாவினுள் ஐஞ்சீரடி வருதலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/274&oldid=1588731" இலிருந்து மீள்விக்கப்பட்டது