உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

  • மறைமலையம் - 23

காதென அதனை விலக்கினார். எனவே, யாப்பருங்கலக்காரிகை எழுதப்பட்ட பிற்காலத்தில் 'வெண்பாவினுள் ஐஞ்சீரடி விரவிவரும் வழக்கு வீழ்ந்து பட்டமை புலனாம். முதலாழ்வார் மூவரும் இயற்றிய முந்நூறு வெண்பாக்களில் ஒன்றிலாயினும் ஐஞ்சீரடி வராமையாலும், இவ்வாழ்வார்கள் இருந்த கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்னரே கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகிய ‘புறப்பொருள் வெண்பாமாலை'யுள் ளும் ஐஞ்சீரடி விரவிய வெண்பாக் காணப்படாமையாலும், 'இன்னிலை' வெண்பாக்களுள் அது விரவக்காண்டலானும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டுப் பொய்கையார் ன்னிலை' இயற்றிய காலத்தே ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியாங்கு வெண்பாவினுள் ஐஞ்சீரடி விரவும் வழக்கு இருந்ததென்பதூஉம்,பொய்கையாழ்வார் திருவந்தாதி பாடிய காலத்துக்கு முன்னரேயே அஃதாவது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே அவ்வழக்கு வீழ்ந்துபட்ட தென்பதூஉம் அறியற்பாலன. ஆகவே 'இன்னிலை' பாடிய பொய்கையாரும் 'திருவந்தாதி' பாடிய பொய்கை யாழ்வாரும் எழுநூறு ஆண்டுகள் இடையிட்ட வெவ்வேறு காலத்தவராவ ரெனவும் பகுத்துணர்ந்து கொள்க.

இனி, இஞ்ஞான்று ‘இன்னிலை'யை அச்சிற் பதிப்பித்து அதற்கு உரையும் எழுதியுதவிய உதவியாளர் 'களவழி' ன்னிலை’ ‘பொய்கையாழ்வார் முதற்றிருவந்தாதி' முதலிய மூன்றையும் பற்றிக் கூறியவைகளை யாம் ஆராய்ந்து பார்க்க. அவை பொருந்தாதனவாய்க் காணப்பட்டமையின், அவர்தம் கூற்றுக்களையும் ஆராய்ந்து உண்மை இதுவெனக் காட்டுவாம்: ‘முதற்றிருவந்தாதிச்’ செய்யுட்களிற் சில மிக அரிய வெண்பா லக்கணங்களுக்கு L டனாயிருக் கின்றனவென அவ் வின்னிலைப் பதிப்புரைகாரர் கூறினர்; ஆனால், அவ் வரிய வெண்பா இலக்கணங்கள் இவை யென்பது அவர் எடுத்துக் காட்டிற்றிலர். மற்றுப், பலவேறு வகைப்பட்ட அமைதிகள் வாய்ந்த வெண்பாக்கள் ‘களவழி, 'இன்னிலை' என்பவற்றிற் காணப்படுமாறு போலப், பொய்கையாழ்வா ரியற்றிய திருவந்தாதியில் அவற்றுள் ஒரு சில தாமுங் காணப்படாமையே மேலே விளக்கிக் காட்டினே மாதலால், அவர் கூற்று கொள்ளற்பால தன்றென விடுக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/275&oldid=1588732" இலிருந்து மீள்விக்கப்பட்டது