உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

267

இனி, முதற்றிருவந்தாதிச் செய்யுட்களில், ‘நன்பு” புலரி' ‘குரா’, ‘திருவன், 'மரிதல்,’ ‘ஏலும்' என்னும் அருஞ்சொற்கள் காணப்படுமாறு போலக், ‘களவழி’யில் அத்தகைய அருஞ் சொற்கள் கணப்படுகின்றில எனவும் முதற் றிருவந்தாதிச் செய்யுட்கள் இனியனவாயும் ‘களவழிச்' செய்யுட்கள் இன்னாதனவாயும் இருக்கின்றனவெனவும் அப் பதிப்புரை காரர் கூறிய கூற்று எமக்குப் பெரிதும் வியப்பினைத் தோற்றுவியா நின்றது. அவர் அருஞ் சொற்களென மேலே கூறிய ஆறும் பொய்கையாழ்வாரது முதற் றிருவந்தாதியில் உளவோ என யாம் ஆராய்ந்து பார்க்க, ‘ஏலும்’ என்னும் ஒரு சொல்லைத் தவிர, ஏனை ஐந்தும் அவர் தம் செய்யுட்களிற் காணப்படு கின்றில. 'ஏலும்' என்னும் அவ்வொருசொற் றானும் ‘ஏனும்' என்பதன் திரிபாக எல்லா ஆழ்வர்களானும் புதுவதாக எடுத்தாளப்படுவது. ஏனை ஐந்து சொற்களில் ‘நன்பு' என்பது நலம் என்னும் பொருளிற் பூதத்தாழ்வார் பாடிய இரண்டாந் திருவந்தாதி முதற் செய்யுளிலும், ‘புலரி' என்பது விடியற்காலம் என்னும் பொரு ளிலும் ‘குரா' என்பது குராமரம் என்னும் பொருளிலும் அதன் முப்பத்தோராஞ் செய்யுளிலும் ‘திருவன்’ என்பது செல்வன் என்னும் பொருளில்

அதன் எண்பத்துநான்காஞ் செய்யுளிலும், ‘மரிய’ என்பது 'தெரியுங்கால்' என்பதற்கு வேறுபாடமாய் வேறோர் ஏட்டுச்சுவடியிற் காணப்பட்டுச் 'சாவ' என்னும் பொருளில் பேயாழ்வார் இயற்றிய மூன்றாந் திருவந்தாதியின் ஐம்பத்தைந்தாஞ் செய்யுளிலுங் காணப்படுவ தாயிருக்க, இச்சொற்களெல்லாம் பொய்கையாழ்வாரது முதற்றிருவந் தாதியில் உளவென அப் பதிப்புரைகாரர் பிறழ்ச்சியுரை நிகழ்த்தினமை எமக்குப் பெரியதோர் இறும் பூதினை விளைப்பதாயிற்று. அருஞ்சொற்களென அவர் கொண்ட தாமும் பொய்கையாழ்வார் பாட்டுக்களில் ல்லாமையால், அதுபற்றி அவ் வாழ்வாரது பழைமையை நாட்டப்புக்க அப்பதிப்புரைகாரது கோட்பாடு நுறுங்கி இல்லையாயிற்று.

வை

இனிக், 'களவழி'யில் அருஞ்சொற்கள் இல்லை யென்றதும், அதன் செய்யுட்கள் இனிமையில்லாதன வென்றதும் பிழைபாட்டுரையாம். 'களவழி' யில் அருஞ்சொற்கள் பற்பல உள; அவற்றுட் சிலவருமாறு: துப்பு,கெழூஉம், தப்பியார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/276&oldid=1588733" இலிருந்து மீள்விக்கப்பட்டது