உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

269

ஒருநூலின் சொல்வழக்கை நன்காராய்ந்து பாராது அந் நூலைப் பழையதென்றாதல் புதிய தொன்றாதல்முடிபு கட்டுதல்பெரிதும் இழுக்குடைத்தாம். அதுவேயுமன்றி, ‘இன்னிலைப்’ பதிப்புரைகாரர்அருஞ் சொற்களென ளன எடுத்துக் காட்டிய நன்பு, புலரி முதலிய ஆறுசொற்களும் அரிதுணர் பொருளனவாகாமை அவற்றிற்கு யாம் மேலே குறித்த பொருள்களானும் இனிது விளங்கும். மேலும், இச் சொற்கள் பூதத்தாழ்வார் பாடல்களில் உள்ளனவே யன்றிப் பொய்கையாழ்வார் பாடல்களில் உள்ளனவும் அல்லவென் பதூஉம் நினை விற்பதிக்கற்பாற்று.

இனிக், 'களவழிச்’ செய்யுட்கள் இனிமையில்லாதன என்ற

அப் பதிப்புரைகாரர்

6

எவ்வாற்றால் அவை இனிமை யில்லாதனவாயின என்பது காட்டிற்றிலர். அவை சொற்சுவை இல்லாதனவா? அன்றிப் பொருட்சுவை யில்லாதனவா? சொற் சுவையில்லாதன என்று கொண்டாரெனின்,

ஒழுக்குங் குருதி யுழக்கித் தளர்வார்

இழுக்குங் களிற்றுக்கோடு ஊன்றி எழுவர் மழைக்குரல் மாமுரசின் மல்குநீர் நாடன் பிழைத்தாரை அட்ட களத்து

(களவழி, 3)

என்பது போன்ற செய்யுட்களைச் சொற்சுவை இல்லாதன வென்று தமிழறிஞர்கூற ஒருப்படுவரோ மொழிமின்! மற்று அவை பொருட்சுவை இல்லாதனவெனக் கொண்டாரெனிற், காவிரி நாடனாகிய கோச்செங்கண்ணான் கழுமலம் என்னும் ஊரின்மேற் படையெடுத்துச் சென்று, அங்கே தன்னை வந்தெதிர்த்த மாற்றாரோடு பொருது அவரைத் தொலைத்து, அவ் வூரினைக் கைப்பற்றிக் கொண்ட நாளில், அவன் போர்புரிந்த களத்திற் குதிரைகளால் உதையுண்டு காம்புமேலாகக் கிடந்த பகைவருடைய குடைகளானவை வயலில் மேயச்சென்ற மாடு களால் உதையுண்டு தண்டுமேலாய்க் கிடந்த காளான்களை ஒத்திருந்தன” என்று அப்போர்க்களத்தைப் புனைந்துரைக்கும், ஓ ஓ உவமன் உறழ்வின்றி ஒத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள்

மாஉதைப்ப மாற்றார் குடையெல்லாங் கீழ்மேலாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/278&oldid=1588735" இலிருந்து மீள்விக்கப்பட்டது