உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

  • மறைமலையம் - 23

ஆஉதை காளாம்பி போன்ற புனல்நாடன் மேவாரை அட்ட களத்து

(களவழி, 36)

என்னுஞ் செய்யுளையும் இதனோடு ஒத்தவற்றையும் பாக்களின் பொருட்சுவை தேர்ந்த புலவோர் பொருட்சுவை இல்லாதன வென்று உரைக்கத் துணிவரோ கூறுமின்கள்!

அற்றன்று, பொய்கையாழ்வார் தம் செய்யுட்கள் கடவுள்மேற் பாடப்பட்டிருத்தலின், அவையே இனிமை யுடையன, மற்றுக் ‘களவழிச்' செய்யுட்களோ போர்க் களத்தின்மேற் பாடப்பட்டிருத்தலின்அவை இன்னாதனவே யாமென்று கோடலே எமது கருத்தாமாலெனின்; நன்று சான்னீர்; கடவுளின்மேல் நெஞ்சுருகிப்பாடும் பாக்கள் இனிமையிற் சிறந்துநிற்றல் போலவே, கடவுள் உயிர்கள்மேல் வைத்த பேரிரக்கத்தால் அவைகட்குப் புல்முதல் மக்கள் ஈறான உடம்புகளையும், அவ்வுடம்புகள் இருந்து உலவுவதற்கு இவ்வுலகத்திற் பல்வேறு இடங்களையும், அவை ஐம்புலன் களாலும் நுகருதற்குப் பலவகைப் பண்டங்களையும் மக்களெவரானும் படைக்க இயலாத அத்துணைத் திறமை யோடும் அழகோடும் படைத்துக் கொடுத்திருத்தலின், அவனது அப் படைப்பின் திறங்களையும், அப் படைப்பின்கண் மக்களுடைய செயல்களால் நிகழும் நிகழ்ச்சி வேறுபாடு களையும் எடுத்துப்பாடுதல் கடவுளைப் பாடுதலோடொப்ப

இன்பம் பயப்பனவேயாம். அங்ஙனம் அல்லாக்கால் 'அகப்பொருள்’, ‘புறப்பொருள்' பற்றி யெழுந்த சங்கப் பாட்டுக்களும், 'சிலப்பதிகாரம்', 'மணிமேகலை' போன்ற பெரும்பொருட்டொடர்நிலைச் செய்யுட்களும் சான்றோரால் அத்துணை விழுமியவாய்ப் பாராட்டப்படாவன்றே. ஆதலால், றைவனைப் பாடும் பாட்டுக்களே யன்றி, இறைவனது படைப்பினையும் அப் படைப்பில் நிகழும் நிகழ்ச்சிகளையும் புனைந்துரைக்கும் பாக்களும் நல்லிசைப் புலவர்களால் ஆக்கப்படின் அவற்றோடொப்ப இனிமை மிக்கனவாயே திகழுமென உணர்ந்துகொள்க. அற்றாயினுங், "களவழிச்” செய்யுட்கள் போர்க்களத்தில் நிகழ்ந்த கொடிய நிகழ்ச்சிகளைக் கூறுதலின், அவை இன்னாதனவேயாமெனிற்; குருதி யொழுகக், குடரும் நிணமும் மூளையுஞ் சிதற, நெஞ்சம் போழப்பட்டுங்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/279&oldid=1588736" இலிருந்து மீள்விக்கப்பட்டது