உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

271

கழுத்து அறுபட்டுங் கைகால் முறிபட்டுங் கிடப்ப, இறைவனருளால் அரிதிற்கிடைத்த மக்கள் யாக்கையை மக்கள் தாமே ஒருவாரோடொருவர் பொருது அழிக்குங் கொடுமை, போர்க்கள நிகழ்ச்சிகளை எடுத்துப் பாடும் பாட்டுக் களானன்றி, மற்றையோர்க்கு வேறொரு வாற்றானும் புலப்பட மாட்டாது, மற்று, அப் போர்க்களப் பாட்டுக்களைக் கேட்ட வளவானே அவர் அப் போர்த் தொழிலின் கொடுமை தேர்ந்து, உள்ளம் இளகி அத்துணைத் தீய தொழில் என்றும் நிகழா திருத்தலை வேண்டுவர். நல்லிசைப் புலவராகிய பொய்கையார் ‘களவழி' பாடிய நோக்கமுங், கோச்செங்கண்ணான் தான் செய்த போரினால் விளைந்த கொடுமையை நன்குணர்ந்து, இனி அதனை மேற்கொள்ளாதிருத்தற் பொருட்டும், அவனது போரினால் முன்னரே தன் படைகளையிழந்து உள்ளம் நிலைகலங்கி நிற்குஞ் 'சேரமான் கணைக்காலிரும்பொறை” யென்னும் புகழோங்கிய சிறந்த மன்னனை மீண்டுஞ் சிறை யிலடைத்து வருத்துதலினும் மிக்க கொடுமை பிறிதில்லை யென்பதனை அப் போர்க்களக் கொடுமை பாடிய பாட்டின் வழிப் புகுந்துணர்ந்து அவனைச் சிறையினின்றும் அவன் விடுதலை செய்தற்பொருட்டுமேயாம். பொய்கையார் பாடிய ‘களவழி’ நூலாற் போரின் கொடுமை தெரிந்த பின்னர்தான், சோழன் கேச்செங்கண்ணான், போர்செய்து பிறர்மண் வெளவுதலை அறவே கைவிட்டுச், சிவபெருமானுக்குத் திருவடித் தொண்டனாகி அப் பெருமானுக்கு ஆங்காங்குத் திருக்கோயில்கள் கட்டுவித்து, அத் திருத்தொண்டி லேயே இன்புற்றிருந்தானாதல் வேண்டும். இன்னும், இறைவனால் வகுக்கப்பட்ட அழகிய அமைதிமிக்க இயற்கைமைப்பில், மக்கள் தமது கொடுஞ்செயலால் உண்டாக்குங் கொடிய போர்க்கள நிகழ்ச்சிகளை எடுத்துப் பாடுவான் புகுந்த ஆசிரியர் பொய்கையார். அக் கொடியவற்றின் தோற்றக் கொடுமையைத் தணிவுசெய்தற் பொருட்டும், தாம் பாடுஞ் செய்யுட்களைப் பயில்வாரது நினைவு அக் கொடுநிகழ்ச்சிகளின் வழியே ஈர்ப்புண்ட போகாமல் அவற்றினின்றும் பிரிந்து இறைவன் அமைத்த அழகிய இயற்கைத் தோற்றங்களிற் சென்று பதிந்து அவற்றை வியந்து இன்புற்று நிற்றற் பொருட்டும், தாம் பாடும் அப்போர்க்கள நிகழ்ச்சிகள் பெரும்பாலனவற்றிற்கு இயற்கைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/280&oldid=1588737" இலிருந்து மீள்விக்கப்பட்டது