உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

  • மறைமலையம் - 23

தோற்றங்கள் பலவற்றை உவமையாக எடுத்துக்காட்டிச் செல்லுதல் பெரிதும் பாராட்டற்பால தொன்றாம். போர்க்களத்திற்குடைகள் காம்பு மேலாகக் கிடத்தலுக்குத் தண்டு மேலாகக் கிடக்குங் காளான்களை உவமைகூறிய பாட்டை மேலே எடுத்துக் காட்டினாம்; இங்ஙனமே ஏனைச் செய்யுட்களிற் பெரும்பாலனவும் இயற்கைத்தோற்ற உவமை காட்டுதல் காண்க. இவ்வாறு பெருங்காப்பியங்களுள்ளும் அடுத்தடுத்துக் காணப்படாத இயற்கைத் தோற்ற உவமைகளை, நாற்பத்தொரு, செய்யுட்களான் அமைந்த இச்சிறிய “களவழி” நூலின்கண் அதனாசிரியர் பொய்கையார் அடுத்தடுத்துக் காட்டிச் செல்லுதலின் கருத்தை நுனித்துக் காணவல்ல அறிவுமதுகையுடையார், அங்ஙனம் அவ் வாசிரியர் செய்தது, தமது நூலைப் பயில்வார்க்கு அவர் தம் நினைவு தாங்காட்டும் அப்போர்க்களக் கொடுங் காட்சி களிலேயே கிடந்துவிடாது, அவற்றைக் கடந்துசென்று இறைவன் வகுத்த இயற்கைத் தோற்ற அழகிற்படிதல் வேண்டியேயாமென உணர்ந்துகொள்வர். இத்துணை நுண்ணுணர்வுகொண்டு உருவத்திற் சிறிதாகிய இக்களவழி நூல் யாக்கப்பட்டமையாலன்றோ, திருக்குறள் நாலடியார் முதலான விழுமிய நூல்களோடு இதுவும் ஒன்றாகச் சேர்த்துப் பதினெண் கீழ்க்கணக்கினுள் வைத்து ஆன்றோராற் பாராட்டப் படுவதாயிற்று. ங்ஙனமாக நுண்மையும் இனிமையும் முதிர்ந்து திகழுங் 'களவழிப்' பாட்டுக்களை இன்னா தனவென்று கூறிய அப்பதிப்புரை காரரது உரை வழுக்குரையே யாமென விடுக்க.

இனிப், பொய்கையாழ்வார் பாடிய முதற்றிருவந்தாதிச் செய்யுட்களெல்லாம் பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் கடவுன்மேற் பாடப்பட்டனவும் அல்ல. சிவபெருமானையுந் திருமாலையும் இவர் ஒன்றுபடுத்தி அருளிச் செய்திருக்கும் 5, 28,74,98 ஆஞ் செய்யுட்களும், அங்ஙனமே திருமாலை மட்டும் மனம் உருகிப் பாடியிருக்கும் வேறுசில செய்யுட்களுந் தவிர ஏனைய வெல்லாங் கண்ணன், வாமனன், நரசிங்கன், வராகன் முதலியோர்மேற் பாடப் பட்டனவாகும். பிறப்பு இறப்பு

ல்லாத் தனிமுதற் கடவுளைமட்டும் வழிபடுவோரான சான்றோர்க்குப், பிறப்பு இறப்பிற் கிடந்துழல்வாரான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/281&oldid=1588739" இலிருந்து மீள்விக்கப்பட்டது