உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

273

மக்களையும் அவரிற் றாழ்ந்த விலங்குகளையும் பாடும் ப்பாட்டுக்கள் அருவருப்பினையும் வருத்தத்தினையும் விளைவியாதிரா. மக்களை மக்களாகவும் தெய்வத்தைத் தெய்வமாகவும் வைத்து மயக்கவுணர்வுக்கு இடமின்றிப் பாடுதல் குற்றம் அன்று; மற்று, மக்களைத் தெய்வமாகவும், தெய்வத்தை மக்களாகவும் பிறழ்த்திவைத்து மயங்கப்பாடுதலே பெரிதுங் குற்றமாவதாம். 'திருமால்' என்பது பிறப்பு இறப்பு இல்லா எல்லாம்வல்ல இறைவியாகிய உமைப்பிராட்டி யல்லாற் பிறிதன்றென்பதனை முன்னரே விளக்கிக்காட்டின மாதலால், திருமாலைமட்டும் வணங்குதல் குற்றம் அன்று. மற்றுக், கண்ணன், வாமனன் முதலான மக்களைத்தெய்வமாக வைத்தும், முழுமுதற் பொருளாகிய திருமாலைப் பிறப்பு இறப்புக்களுட் படுத்தும் பாடியதே குற்றமாம். ஆகவே, பொய்கையாழ்வார் திருமாலையுஞ் சிவபிரானையும் விடுத்த, ஏனை மக்களுள்ளுஞ் சிற்றுயிர்களுள்ளும் படுவாரான கண்ணன், வாமனன், நரசிங்கன், வராகன், இராமன் முதலியோரைத் திருமாலாக வைத்துப் பாடியதும், உலகிற்கு முழுமுதற் கடவுள் அம்மையப்பரும் அல்லது மாலுஞ் சிவமுமாம் ஒருவரேயாக அவரைவிடுத்து, “முதலாவார் மூவரே" எனப் புராணக் கதையை நம்பிக் கடவுளை மூவரெனக் கூறியதும் மெய்யறிவினருக்கு இன்னாதனவாகவே காணப்படும். சைவசமயாசிரியருள் எவரும் 6 ங்ஙனம் வைணவ ஆழ்வார்களைப்போல் யாண்டும் மயங்கிப் பாடிற்றிலர்; அவர்களெல்லாரும் பிறப்பிறப்பில்லாத் தனித்தலைமைக் கட வுளாகிய அம்மையப்பர் ஒருவரையே, மூவர்க்கும் முப்பத்து மூவர்க்கும் மற்றொழிந்த தேவர்க்கும் மேற்பட்டவராக வைத்துப் பாடியிருக்கின்றனரென்பதை மேலே பலகாலுங் வற்புறுத்திப் போந்தாம். பொய்கையாழ்வாரும் பேயாழ் வாரும் இடையிடையே புராண கதைகளான் மயக்குற்றுத் திருமால் அல்லாதவற்றையுந் திருமாலாக் கொண்டு பாடிப் பிழைபட்டனராயினும், இடையிடையே அம்மயக்கந் தீர்ந்து மெய்யுணர்வு தெளிந்து சிவபிரானுந் திருமாலுமாய்க் கூடிய முழுமுதற் கடவுளின் ஒருருவினையுந் திருமாலையுங் குழைந்துருகிப் பாடியிருக்கின்றனராகலின் அவ்விருவரும் எம்மனோராற் பெரிது பாராட்டப்படுந் தகையரேயா மென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/282&oldid=1588741" இலிருந்து மீள்விக்கப்பட்டது