உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

மறைமலையம் - 23

என்

இனி, 'இன்னிலை' பாடிய பொய்கையாரும், 'முதற்றிரு வந்தாதி” பாடிய பொய்கையாழ்வாரும் ஒருவரேயென நாட்டுதற்கு அப் பதிப்புரைகாரர் வேறுசில குறிப்புகள் காட்டினார்; அவை தம்மையும் ஆராய்வாம்; 'இன்னிலை’ச் செய்யுட்கள் சிலவற்றிற் குற்றியலுகரத்தின்பின் வந்த உயிர்கள் உடம்படு ம்படு மெய் பெற்றிருத்தல்போல, முதற்றிரு வந்தாதிச் சய்யுட்கள் சிலவற்றிலுங் குற்றியலுகரத்தின் பின்வந்த உயிர்கள் உடம்படுமெய் பெற்றிருக்கின்றன வென்று அவை இரண்டற்கும் ஒற்றுமை காட்டினார். இதுபெரிதும் பிழை பாடான ஒற்றுமையே யாகும்; ஏனெனிற், குற்றிய லுகரத்தின் முன் வரும் உயிர், அக்குற்றியலு கரங்கெட நின்ற மெய்யின்மேல் ஏறிவருதலே செய்யுள் வழக்கிலும் உலக வழக்கிலும் இயற்கை யாகக் காணப்படுவ தொன்றாம். 'எழுந்து இருந்தான்’, ‘மருந்து உண்டான்’, ‘நாகு ள வரி வண்டு உண்டு என்றற் றொடக்கத்தன இருவகை வழக்கிலும் 'எழுந்திருந்தான்', 'மருந்துண்டான்', 'நாகிளவரி வண்டுண்டு என்றுதான் எல்லாராலுஞ் சொல்லப்படுமே யல்லாமல் ‘எழுந்து விருந்தான்’, ‘மருந்துவுண்டான்”, “நாகுவிளவரிவண்டுவுண்டு', என உடம்படுமெய் புணர்த்துச் சொல்லப்படா. சொற்களைச் சொல்லுங்காற் குற்றியலுகர ஈற்று உகரங்கெட நின்ற மெய்ம்மேல் வந்த உயிரேறி முடிதலே எங்கும் இயற்கையாகக் காணப்படுதலின், அவ் வியற்கையையே ஆசிரியர் தொல்காப் பியனாரை உள்ளிட்ட இலக்கண ஆசிரியர் இலக்கணமாகக் கூறாநிற்பர். குற்றியலுகரத்தின் முன்வரும் உயிர் உடம்படுமெய் பெறுமெனத் தொல் காப்பியனார் யாண்டுங் கூறிற்றிலர். அதனாற், குற்றியலுகரத்தின் முன்வரும் உயிர் உடம்படுமெய் பெறவைத்தல் இயற்கைக்கும் இலக்கணத்திற்கும் மாறான பிழையேயல்லாமற் பிறிதன்று பிழையேயாயினும் வெண்பா வினும் பிற பாக்களினும் முறையே தளையுஞ் சீருங் கெடாமைப் பொருட்டு அவ்வியற்கைக்கு மாறாக அருகி ஒரோவொருகாற் குற்றியலுகரத்தின்முன் வந்த வுயிர்க்கு உடம்படுமெய் கொடுத்து நல்லிசைப் புலவர் செய்யுள் யாத்தலும்உண்டு; இது பிழையே யாயினுஞ் செய்யுள் யாத்தல் வருத்தமான செயலாதல்பற்றி அதனை ஆன்றோர் விலக்காது கொள்வர். எனினுங், குற்றியலுகரத்தின்முன் வரும் உயிர் உடம்படுமெய் பெறுதல்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/283&oldid=1588742" இலிருந்து மீள்விக்கப்பட்டது