உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

275

இயற்கைக்கும் இலக்கணத்திற்கும் மாறாய் இன்னா ஓசைத்தா யிருத்தலின், தொல்காப்பியனார் காலத்திற்கு முன்னும் அவர்க்குப்பின் இடைச்சங்க கடைச்சங்கச் சான்றோர் செய்யுட்களினுங், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட‘சிலப்பதிகாரம்’, ‘மணிமேகலை' என்பவற்றினுங் அங்ஙனங் குற்றிய லுகரத்தின்முன் வரும் உயிர் உடம்படுமெய் பெற்று முடிதலை யாண்டுங் கண்டிலேம். மற்று, மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த திருவாசகத் திலோ, அடித்தடித் தக்காரம் என வரற்பாலது சீர் கெடாமைப் பொருட்டு "அடித்தடித்து வக்காரம்’ (அற்புதப்பத்து, 3) என ஓ ரிடத்தில் மட்டுங் குற்றியலுகரத்தின் முன் வந்த உயிர் உடம்படுமெய் பெற்றுமுடிந்தது. எனவே, பண்டை இலக்கண ஆசிரியராகிய தொல்காப்பியனார் செய்த இலக்கணத்திற்கும், அவர்க்குப் பின்வந்த ஏனைச் சான்றோர் செய்த இலக்கியங் கட்கும் முரணாகப், பாக்களிற் சீர் தளை கெ கடாமைப் பொருட்டுச் சொற்களையுஞ் சொற்புணர்ச்சிகளையும் ஒரோவழிப் பிழைபட அமைத்தல், திருவாதவூரடிகள் இருந்த கி.பி. மூன்றாம் நூற்றாண்டுமுதல் நிகழ்ந்ததாகல் வேண்டும். இவ்வாறு பண்டைச் சான்றோர்இலக்கண இலக்கியங்கட்கு முரணான பல மாறுதல்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் த்தென்றமிழ் நாட்டின்கண் நிகழலானமை வேறோராற் றானும் பெறுதும். என்னை? தொல்காப்பியத்துஞ், சங்க இலக்கியங்களிலும் ஒரு சிறிதுங் காணப்படாத ‘கட்டளைக் கலித்துறை’, 'விருத்தம்' என்னும் பாவகைகளும், புதிய புதிய வடசொற்களும் பாரத ராமாயண புராண கதைகளும், பல்சமயக் கோட்பாடுகளும், பிறவும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இயற்றப்பட்ட தமிழ் நூல்களின் மட்டுமே காணக்கிடத்தலினென்பது. இங்ஙனமாக முன்னோர் நூல்களிற் காணப்படாதனவும், அவற்றோடு ஒரோவழி மாறாவனவு மாகிய பல நிகழ்ச்சிகளின் இடையே, 'குற்றியலுகரத்தின்முன் வரும் உயிர் உடம்படுமெய் பெறும்" புதுவழக்கும் ஒரோ வாருதால் விரவலாயிற்று ஆகவே உண்மை மாலீர்த்து விருள்கடித்து” என 41 ஆஞ் செய்யுளிலும், “ஐயுணர்வான் ஆய்ந்து வறஞ்சார்பா”என 44 ஆஞ் செய்யுளிலுங் குற்றியலுகரத்தின்முன் வந்த உயிர்க்கு உடம்படுமெய் புணர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/284&oldid=1588744" இலிருந்து மீள்விக்கப்பட்டது