உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

ஓதிய

மறைமலையம் 23

ன்னிலை' என்னும் நூலும் அதனாசிரியர் பொய்கையாரும், திருவாதவூரடிகள் இருந்த கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குச் சிறிது முன்னே இருந்தமை தெற்றென விளங்கா நிற்கும். 'களவழி' நூலில் முன்னோர் வழக்குக்கு முரணான இப்பெற்றியது எதுவுங் காணப் படாமையிற், களவழியும் அதனை யாக்கிய பொய்கையாருங் கடை காலத்தில் அஃதாவது கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னே இருந்தமையுந் தானே பெறப்படா நிற்கும். பொய்கையார் கி.பி.

கடைச்சங்க

வ்வாற்றாற் 'களவழி'யியற்றிய ரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னும் ‘இன்னிலை' இயற்றிய பொய்கையார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஈற்றிலும் இருந்தமை பெறப்படுதலின் அவ்விருவரும் வேறு வேறாவரென்பது கடைப்பிடிக்க. இன்னிலை யியற்றிய பொய்கையார் முன்னோர் வழக்கொடு மாறுபட்டது ஃதொன்றின்மட்டுமே யல்லாமல், ஏனைப் பா அமைப்பு முதலியவற்றின் அல்லாமையின் இவரைக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஈறு அல்லது மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்திற்குப்பின் கீழ் இறக்குதல் இயலாதென்பதூஉங்

கருத்திற் பதிக்கற்பாற்று.

இன்னிலை” இயற்றிய பொய்கையார் கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவரல்ல ரென்பது மற்றுமோ ராற்றானும் பெறுதும். போர்க்களத்தில் வந்து நின்ற அருச்சுனனுக்கு, அவன் நேரிற் பாகனாய் அமர்ந்த கண்ணன் ‘பகவற்கீதை நூல்' செவியறிவுறுத்தின னென்னும் மாபாரதக் கதையை ‘இன்னிலை'யின் முதற்செய்யுள் குறிப்பிடுகின்றது பாரதப்போரை மட்டுங் குறிப்பிட்ட பழந்தமிழ்ப்பாட்டுக் கி.மு. மூவாயிர ஆண்டுகட்கு முன்னரே உளதேனும், மாபாரதக் கதைகளையாதல் கண்ணன் என்னும் பெயராற் கண்ணனது வணக்கத்தை யாதல் குறிப்பிட்ட பழந்தமிழ்ப்பாட்டுக் கிறித்து பிறப்பதற்கு முற்பட்ட காலத்தில் ஒன்றுமே யில்லை.மாபாரதக் ஒன்றுமேயில்லை. கதை தமிழ்நாட்டார்க்குத் தெரியத்துவங்கியதும், அது தமிழின் கண்மொழிபெயர்க்கப்படலானதும், அதன் வழியே கண்ணனுந் திருமாலின் வடிவான ஒரு தெய்வமாக வைத்து ஈண்டுள்ளாராற் பெரிதும் வணங்கப்படலானதும் எல்லாங் கி.பி. முதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/285&oldid=1588746" இலிருந்து மீள்விக்கப்பட்டது