உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

நூற்றாண்டுமுதல் நிகழலாயின வென்பதை

277

முன்னரே

விளக்கிப் போந்தாம். ஆகையாற், கண்ணன் அருச்சுனற்குக் கீதைநூல் அறிவுறுத்தியதாகக் கூறும் மாபாரதக் கதையைத் தமது 'இன்னிலை' முதற்செய்யுளில் எடுத்து மொழிந்த அதன் ஆசிரியர் பொய்கையார் கி.பி.முதல் நூறாண்டிற்கும் பின்னிருந்தோரேயாதல் வேண்டும். 'பகவற்கீதை' என்னும் நூல் மாபாரதத்தில் எழுதி இடை டை நுழைக்கப்பட்டது கி.மு.முதல் நூற்றாண்டிற்கு முற்சென்ற தெனல் ஆகாமை யானும், அது தானுந் தமிழ்நாட்டார்க்குத் தெரியலானது கி.பி.முதல் நூற்றாண்டிற்கு முன்னென்றல் இயையாமை யானும், அதனைக் குறிப்பிட்ட 'இன்னிலை' ஆசிரியர் பொய்கையார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின்கட் பட்டவரென்பதே தேற்றமாம்

என்க.

2

இனி, 'முதற்றிருவந்தாதி” பாடிய பொய்கையாழ்வார் ன்னிலை' பாடிய பொய்கையாரைப்போல், தமது 95 ஆஞ் செய்யுளிற் குற்றியலுகரத்தின்முன் வந்த உயிர்க்கு உடம்படு மெய் புணர்த்தோதினா ரென்றதும் பிழைபாடாம். என்னை? "நமோநாரணா வென்ன”என வேறு திருத்தமான பாடமே வைணவப் புலவர்களால் ஒப்புக்கொண்டு பதிப்பிக்கப்பட் டிருத்தலின்“என்று” என்னும் பிழையான பாடத்திற்கு வேறாக “என்ன”என்னுந் திருத்தமான பாடம் உளதாகலிற், பிழையான பாடம் இவ் வொன்றைக்கொண்டு பொய்கையாழ்வாரையும், இன்னிலை' பாடிய பொய்கை யாரையும் ஒன்றுபடுத்த முனைந்த இன்னிலைப் பதிப்புரை காரர் கருத்து நிரம்பு மாறில்லையென விடுக்க. பிழையான பாடத்தையே உறுதி யாகக்கொண்டு, அவ் விருவரையும் ஒன்றுபடுத்தலாமெனினுங், குற்றியலுகரத்தின் முன் வந்த உயிர்க்கு உடம்படுமெய் புணர்த்து ஓதிய திருவாதவூரடிகள் உளராகலின், இப் புதிய புணர்ப்புப் பொய்கையாழ்வார்க்குமே உரித்தென்றலும் பொருந்தா தென

ஓர்க.

ம்

இனி, 'இன்னிலை'யின் 27 ஆஞ் செய்யுள் “மகவு” என முற்றியலுகர ஈற்றான் முடிதல்போலப், பொய்கையாழ்வார் அருளிச்செய்த 'முதற்றிருவந்தாதி'யின் 12, 53, 67 ஆஞ் செய்யுட்களும் முற்றியலுகர ஈற்றான் முடிதலின், அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/286&oldid=1588747" இலிருந்து மீள்விக்கப்பட்டது