உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

மறைமலையம் - 23

விருநூல்களையும் ஆக்கிய பொய்கையார் ஒருவரே யாவரென ன்னிலைப் பதிப்புரைகாரர் கூறினர். இவர் கூறியபடியுளவா என்று ‘முதற்றிருவந்தாதி'யை யாம் எடுத்து உற்றுநோக்க, அதன்கட் 12 ஆஞ் செய்யுளின் ஈற்றில் "இயல்பு" எனக் குற்றியலுகர ஈறு வந்திருக்கக் கண்டாமே யன்றி, அவர் கூறியபடி முற்றியலுகர ஈறு வரக்கண்டிலேம். உண்மை யிவ்வாறாக, அதனை அப் பதிப்புரைகாரர் புரட்டிக் கூறியது என்னையோ! ஆனால், 53 ஆஞ் செய்யுள் “கரவு” எனவும், 67 ஆஞ் செய்யுள் “உணர்வு” எனவும் அவர் உரைத்தவாறே முற்றியலுகர ஈறுகளாலே தாம் முடிந்திருக்கின்றன. இங்ஙனம் வெண்பா யாப்புக்கள் முற்றியலுகர வீற்றான் முடிதல், ன்னிலை' ‘முதற்றிரு வந்தாதி' என்னும் இவ் விருநூல் களிலன்றி, வேறு வண்பா நூல்களிற் காணப்படா தாயினன்றே, அவற்றின் ஆசிரியரை ஒருவராகக் கூறுதல் ஒருவாற்றாற் கூடினுங் கூடாநிற்கும்? மற்று, வெண்பா யாப்புக்கள் ஒரோவழி முற்றியலுகர ஈற்றான் முடிதலும் உண்டென்பது,

கெடுவாக வையா துலகம் நடுவாக

நன்றிக்கட் டங்கியான் தாழ்வு

எனத் திருக்குறளிலும்

என

திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர் இறந்துபடிற் பெரிதாம் ஏதம் - உறந்தையர்கோன் தண்ணார மார்பிற் றமிழ்நர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு

முத்தொள்ளாயிரத்திலும்

அவ்வாறு

(117)

முடிந்த

செய்யுட்களால் நன்கறியக் கிடத்தலின், அதனை இன்னிலை, முதற்றிருவந்தாதி என்னும் இரண்டுக்குமே வரைசெய்தலும், அங்ஙனம் வரைசெய்த பிழைபாட்டால் வெவ்வேறு காலத் தினரான இன்னிலைப் பொய்கையாரையும் பொய்கை யாழ்வாரையும் ஒருவ ரென்றலும் போலி யாராய்ச்சி யாமென மறுக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/287&oldid=1588749" இலிருந்து மீள்விக்கப்பட்டது