உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மறைமலையம் - 23

பொருளொற்றுமை யுடையவாயின என்ற ‘இன்னிலைப் பதிப்புரைகாரரது உரை பெரியதொரு மயக்குரையேயாம்; 'மயக்கு' என்னுஞ்சொற் காணக்கிடக்குந் தமிழ்ச் செய்யுட்களை யெல்லாம் அவர் 'பொய்கையார் செய்யுட்கள்' எனக் கூறத் துணிவர்போலும்! ன்னிலை'யின் பத்தாஞ்

செய்யுளாகிய,

இனி,

இடிப்பதென் றெண்ணி இறைவனைக் காயார் முடிப்பர் உயிரெனினும் முன்னார் - கடிப்பவே கன்றமாந்து தீம்பால் கலழுமே நீண்மோத்தை ஒன்ற உணராதார் ஊங்கு

என்பது 'இடியிடித்து அச்சுறுத்துதல் பற்றித் தலைசிறந்த மழைமுகிலை எவரும் வெகுளார்; தீயோர் தமது உயிர்க்கு இறுதி பயப்பரெனினும் நல்லோர் அவர்க்குத் தீங்கு செய்ய நினையார், கன்று தனது முலையைக் கடித்த விடத்தும் ஆ அதற்கு மனம் உவந்து தித்திப்பான பாலைச் சுரக்கும், அதுபோலத் தமக்குஇன்னா செய்தார்க்குந் தாம் இனியவே செய்தலைப் பொருந்த உணராதாரினும் ஆட்டுக்கிடாய்களே சிறந்தன” எனப் பொருள்படும். இதனோடு பொருள் ஒற்றுமையுடையதென அவர் காட்டிய முதற்றிருவந்தாதியின் முப்பதாஞ் செய்யுளாகிய, தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத் தெளிதாக நன்குணர்வார் சிந்தை -எளிதாகத் தாய்நாடு கன்றேபோல் தண்டுழாயான் அடிக்கே போய்நாடிக் கொள்ளும் புரிந்து

தாக

என்பதோ ‘தெள்ளிதாகத் தமது மனத்தைச் செவ்விதின் நிறுத்தி,மெய்யுணர்வு கொண்டு முப்பொருளியல்பினை எளி நன்குணரவல்லாரது நினைவு, தனது தாயை நாடிச்செல்லுங் கன்றைப்போல் எளிதாகத் திருமாலின் திருவடிகளை விரும்பிப்போய்த் தேடிக்கொள்ளும்' எனப் பொருள்தரும். இவ் விரண்டுள் முன்னையது தமக்குத் தீதுசெய்வார்க்குந் தாம் தீது நினையாது நன்மையே செய்யும் நல்லாரது இயல்பினை உணர்த்தாநிற்கப் பின்னையதோ 'மெய்யுணர்வு வாய்ந்தாரது நினைவு திருமாலின் திருவடிகளை எளிதிற்சென்று தலைக்கூடு மாற்றை, அறிவுறுத்துகின்றது. இவையிரண்டிற்கும் ஏதொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/289&oldid=1588751" இலிருந்து மீள்விக்கப்பட்டது