உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

281

பொருளொற்றுமையுங் காணப் படாதாகவும், அதனையுளது போல் மயங்கியுரைத்த அப் பதிப்புரைகாரருரை கொள்ளற் பாலதன்றென விடுக்க. கன்றும் ஆவும் அவ் விரு செய்யுட்களினும் உவமையாகக் கூறப்படுதலின், அவ்வுவமையே அவற்றிற்கு ஓர் ஓர் ஒற்றுமையாகக் கொள்ளுதல் ஆகாதோவெனின் : அவ்வுண்மை.

பல்ஆவுள் உய்த்து விடினுங் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலை

(101)

என நாலடியாரினும் போதரக் கண்டாலின், அதனையும் பொய்கையாரே இயற்றினரென்று உரைத்தல் வேண்டும்; மற்று அவ்வாறுரைத்தல் பெரியதொரு தலைதடுமாற்றமாய்

முடியுமாகலின், அங்ஙனங் கோடல் ஆகாதென மறுக்க.

மேலும், ஐம்புலன்களை அடக்கி உடற்குவருந்துன்பம் பொறுத்துத் தவம்புரிவார் வீட்டுலகத்திற் செல்வரென்பது அறிவுநூல்கள் எல்லாம் புகலும் ஒரு பொதுவுரையாகும். இப்பொதுவுரை 'இன்னிலை’ ன்னிலை' 42 ஆஞ் செய்யுளிலும், 'முதற்றிருவந்தாதியின் 50 ஆஞ் செய்யுளிலுஞ் சிறிது ஒத்துக்காணப்படுதல் கொண்டு அவையிரண்டனையும்

ஒருவரே யியற்றினாரென்றல் பெரியதொரு மாறுகோள் உரையாம். இச் செய்யுட்களை நன்கு ஒப்பிட்டுக் காண்பார்க்கு இன்னிலைச்’ செய்யுட்கள் ாதுப்பட நிற்றலும், ‘முதற்றிருவந்தாதிச்' செய்யுட்கள் திருமால் மேலனவாய் நிற்றலும் எளிதுணரக்கிடக்குமாகலின், அந்நூல்களை யியற்றிய

ஆசிரியர் ருவரும் வெவ்வேறு காலத்தவரென்பதே

தேற்றமாம் என்க.

இனி, “ஒன்றுண்டே என்னும் 'இன்னிலை' செய்யுள் 'உயிர்கள் உண்டு; அவை உடம்பைப் பற்றுக்கோடாகக் கொண்டு வினைகளைச்செய்யும்; மெய்யுணர்வு பிறந்தவழி ருவினைகளை அறுத்துஉடற்பற்றுவிட்டு வீடுபேறெய்தும்’ எனக் கூறி முடிக்கின்றது. இச் செய்யுட்பொருளை 'இன்னிலைப் பதிப்புரைகாரர்' விஷ்ணுமத சித்தாந்தம்" என்கின்றார். உலகத்தின்கண் உள்ள அறிவுடையா ரெல்லாருந் தொன்று தொட்டுப்பொதுப்பட வழங்கிவரா நின்ற இக் கோட்ப்பாட்டை அப் பதிப்புரைகாரர் வைணவமதத்திற்கே உரித்தாக்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/290&oldid=1588752" இலிருந்து மீள்விக்கப்பட்டது