உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

283

அவ் விரண்டு நூல்களிலுமிருந்து மேலெடுத்துக்காட்டிய சிற்சில செய்யுட்களை ஒப்பிட்டுக் காண்பார்க்கும் நன்கு புலனாமாகலின்,அங்ஙனந் தன்மையால் மாறுபட்ட அவ்விருவேறு நூல்களையும் இயற்றினோர் இருவேறு பொய்கையாரே யாவரென்க. மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் முதலான பெயர்களைப் பூண்டோர் பற்பலர் இஞ்ஞான்றுங் காணப்படுதல் போலவே ஒரே பெயர் பூண்டோர் பற்பலர் பற்பல காலங்களில் முந்நாளிலும் ருந்தனரென்பதூஉம் பெரிதும் நினைவிற் பதிக்கற்பால தான்றாம். நக்கீரர், கபிலர், ஒளவையார் என்னும பெயர் களைப் பூண்ட பற்பலர் பற்பல காலங்களில் இருந்தனர். இவ்வுண்மையை நினைந்து பாராமல் வரலாற்று நூல்கள்

ழுதுவோர் முன்னொடுபின் முரணான பல செய்திகளைத் தம்முடைய நூல்களுள் எழுதிச் சேர்த்தலால் அவர் விளைத்தனவும் விளைக்கின்றனவும் ஆகிய குழப்பங்கள் நிரம்பப் பல. இதுகாறும் விளக்கிய மூவேறு பொய்கையாரே யன்றி, யாப்பருங்கலவிருத்தி யுரையிலும் பாட்டியன் மரபிலும் எடுத்துக்காட்டப்படும் மற்றொரு பொய்கையாரும் உளர்; இங்ஙனமே, 'பேயார், 'பூதத்தார்’ எனப் பெயர்பூண்ட முன்னோர் பிறருமுளரென்பது அவ்வுரையுட் பெறப்படுதல்

காண்க.

இனி, "விருந்தே தானும்” என்னுந் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர உரையில் உரைகாரர் பேராசிரியர் "விருந்து தானும் புதிதாகத் தொகுக்கப்பட்டுந் தொடர் நிலைமேற்று. அது 'முத்தொள்ளாயிர'மும் பொய்கையார் முதலாயினோர் செய்த ‘அந்தாதி’ச் செய்யுளும் எனவுணர்க' என் றெழுதியதே கொண்டு அவ்வுரைகாரர் பொய்கை யாழ்வாரைக் கடைச்சங்க காலத்தவராக கொண்டனரென ஒருசாரார் கூறாநிற்பர். ஆசிரியர் தொல்காப்பியனார் தங்காலத்து வழங்காமற் பிற்காலத்திற் புதிது புகும் நூல்வகைகள் செய்யுள்வகைகள் உளவாயின் அவை தம்மையும் விலக்காது தழுவிக்கொள்க என்றற்கு இச்சூத்திரம் அருளிச்செய்தார்; ஒரு செய்யுளின் ஈறு அதனை யடுத்த செய்யுட்கு முதலாக வரத் தொடுத்துப் பாடும் ‘அந்தாதிச் செய்யுள்' தொல்காப்பியனார் காலந் தொட்டுக் கடைச்சங்கத் திறுதியாக வந்த சான்றோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/292&oldid=1588755" இலிருந்து மீள்விக்கப்பட்டது