உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

  • மறைமலையம் - 23

4

எவரானும் பாடப்படாமையின், அவ்வந்தாதிச் செய்யுள் கடைச்சங்க காலத்துக்குப்பின் வந்த சான்றோராற் புதிது செய்யப்பட்டன வாமென்பது புலப்பட உரைகாரர் பேராசிரியர் “புதுவது கிளந்த யாப்பின் மேற்றென்ற தென்னை யெனின், புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தாடர்ந்து வரச்செய்து அது முத்தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதி’ச் செய்யுளும்”என உரை கூறினார்; இவ் வுரைப்பொருளாற் 'பொய்கையாழ்வார் இயற்றிய முதற்றிருவந்தாதி' கடைச் சங்கத்தார் காலத்திற்குப்பின் புதிதாகச் செய்யப்பட்ட தொன்றென்பதே வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடப்பவும், அவரது கருத்துக்கு முற்றும் மாறாகப், பொய்கை யாழ்வாரை அவர் கடைச்சங்க காலத்தவராகக் காண்டாரெனத் தலைதடுமாறி யுரைத்தாருரை நகையாடி விடுக்கற்பாலதாமன்றி மற்றென்னை? பேராசிரியர்க்குப்பின் தால்காப்பியத்திற்கு உரைகண்ட நச்சினார்க்கினியரும் “பின்னுள்ளார் பாட்டியன் மரபிற் கூறிய கலம்பகச் செய்யுள் எனவும், “இக்காலத்தார் கூறும் அந்தாதிச் சொற்றொடர் "5 எனவும் விளங்கக் கூறுதலின், அவரும் பொய்கையாழ்வார் பாடிய முதற்றிருவந்தாதியைப் பிற்காலத்ததெனவே கொண்டாரென்பது புலனாம். தொல்காப்பியத்திற்கு முதலில் உரைகண்டவரான இளம்பூரணர், பொய்கையார் திருவந்தாதியைப் பேராசிரியர் குறித்தாற்போற்றாம் சிறிதுங் குறித்திலாமையின், அவர் பொய்கையாழ்வார்க்கு முற்பட்டவ ராவரென்பதூஉம் அறியற்பாற்று. பொய்கையாழ்வார் கடைச்சங்க காலத்த வராயின், அச்சங்க காலத்திற்குப் பின்னெழுந்த சிலப்பதிகாரம் 'மணிமேகலை' என்பவற்றையும், அவற்றிற்கும் பிற்பட்ட ‘புறப்பொருள் வெண்பாமாலை’யையுந் தம்முரையுள் எடுத்தாண்ட இளம்பூரணர் பொய்கையாழ்வாரது முதற்றிரு வந்தாதியையும் எடுத்தாளாது இரார். ஆகவே, பொய்கை யாழ்வாரது அந்தாதிச் செய்யுளை “விருந்தே தானும்” என்னுஞ் சூத்திரவுரையிற் குறிப்பிட்ட பேராசிரியர், அவர்குக்குப்பின் கி.பி. ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் இருந்தோரா தலும், அதனை அச் சூத்திரவுரையிற் குறிப்பிடாத இளம் பூரணர் கி.பி. ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டிலிருந்தோ

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/293&oldid=1588756" இலிருந்து மீள்விக்கப்பட்டது