உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2 ×

285

ராதலும் ஈண்டே யறியற்பாலனவாம். அற்றாயின், யாப்பருங் கலக்காரிகை உரைப்பகுதிகள் சில, “அடிநிமிர் கிளவி ஈரா றாகும்" என்னுந் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர இளம் பூரணவுரையெனப் பதிப்பிடப்பட்டதனுட் காணப்படுதல் என்னையெனின்; இளம்பூரணர் தொல்காப்பிய எழுத்துச் சொற்பொருள் என்னும் மூன்று ஓத்துக்களுக்குந் தாம் எழுதிய உரையுள் வேறு யாண்டுஞ் 'சூளாமணி', 'சிந்தாமணிச்' செய்யுட்களை மேற்கோளாக எடுத்துக் காட்டுதலை காணேமாகலிற், செய்யுளியலில் இரண்டோரிடத்து மட்டும் அவர் அவற்றின் செய்யுட்களை எடுத்துக்காட்டினா ரென்றல் பெரிதும் ஐயுறற்பால தொன்றாம். மேலுந், தொல்காப் பியனாராற், கூறப்படாமற், பின்வந்த 'யாப்பருங்கலக் காரிகை'க்காரரால் வகுத்துரைக்கப் பட்ட 'விருத்தப்பா' வகைகள் இவ் வ் வுரையுள் ஆண்டிருந்த வாறே வருவித்து உரைக்கப்படுதலானும், இளம்பூரணருக்குப் பின்வந்த பேராசிரியர் அவ் விருத்தப்பா வகைகளைத் தமதுரையுள் அவ்வாறு வருவித்துரைப்பக் காணாமையானும், அவ் வுரைப்பகுதிகள் இளம்பூரணர் வரைந்தன ஆகாவெனவும், அவை யாப்ப்பருங்கலக்கரிகை யுரையிலிருந்து பிறரால் எடுத்துச் சேர்க்கப்பட்டனவா மெனவும், இவ் வேற்றுமையுணராது அவற்றை இளம் பூரணருரையெனப் பதிப்பித்திட்டது அதனைப் பதிப்பிட்டவரது தவறாமெனவும் பகுத்தறிந்து கொள்க. கொள்ளவே, தொல்காப்பிய முதலுரைகாரரான ளம்பூரணர் சூளாமE 'சிந்தாமE' நூல்களின் காலத்துக்குப் பிற்பட்டவரல்ல ரென்பதூஉம், அவர் அவற்றிற்கு முற்பட்ட கி.பி.ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் இருந்ததோ ராவரென்பதூஉம் கடைப்பிடித் துணரற்பாலவாம். எனவே, இளம்பூரணர் காலத்தில் இல்லாததூஉம், பேராசிரியர் காலத்துள்ளதாய் அவராற் பிற்காலத்ததென்று கொள்ளப் பட்டதூஉமான பொய்கை யாழ்வாரது முதற்றிருவந்தாதி கி.பி.எட்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல் செல்லாமையுந் தானே விளங்கும் என்பது.

அற்றேல், 'கைலைபாதி காளத்திபாதி அந்தாதி' என்பதொரு நூல் நக்கீரனால் அருளிச் செய்யப்பட்ட தென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/294&oldid=1588757" இலிருந்து மீள்விக்கப்பட்டது