உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

மறைமலையம் - 23 *

வழங்கக் காண்டுமாகலின், அந்தாதிச் செய்யுள் பிற்காலத்த தென்றல் யாங்ஙனமெனின்; 'நக்கீரனார் என்னும் பெயர் கொண்ட புலவோர் பலர் பற்பலகாலத்திருந்தனரென முன்னரே கூறினமாகலிற், 'கைலைபாதி காளத்திபாதி அந்தாதி' பாடிய நக்கீரர் கடைச்சங்க காலத்தவர் அல்லரென ஓர்க. பதினோராந்திருமுறையில் திருமுருகாற்றுப்படை' நீங்கலாகக் 'கைலைபாதி காளத்திபாதி அந்தாதி' முதலிய நூல்களை இயற்றிய நக்கீரரும், அங்ஙனமே மூத்த நாயனார், கண்ணப்பதேவர், சிவபிரான், முதலாயினார்மேல், நூல்களிற்றிய கபிலர், பரணர், கல்லாடர், காரைக்காற் பேயம்மையாரு மெல்லாங் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கும் ஆறாம் நூற்றாண்டிற்கும் இடையிலிருந்தோ ராவர். “கொங்குதேர் வாழ்க்கை” என்னுஞ் செய்யுளுக்குக் குற்றங்கூறிய நக்கீரர், கடைச் சங்ககாலத்திற்குப் பின் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் மதுரையில் இருந்ததாகிய மற்றையொரு தமிழ்ச்சங்கத்திற் சமண்புலவர் பலரோடிருந்து தமிழாராய்ந்தவர் ஆவர். இவ் வரலாற்றினைப் பின்னை விளக்கிக்காட்டுதும். இவ்வாற்றால் அந்தாதிச் செய்யுள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது அற்றென்பதூஉந் தெளியக் கிடந்தவாறுணர்க.

அற்றாயின், பொய்கையாழ்வார்க்கு முன்னிருந்த நக்கீரரது ‘கைலைபாதி காளத்திபாதி அந்தாதி' பேயம்மையாரது ‘அற்புதத் திருவந்தாதி’ முதலியவற்றை எடுத்துக்காட்டாது, அவர்க்கெல்லாம் பின்னர் இருந்த பொய்கையாழ்வாரது முதற்றிருவந்தாதியை மட்டும் பேராசிரியர் தமதுரையுள் எடுத்துக்காட்டிய தென்னையெனின்; பேராசிரியர் வைணவ மதம் பெரிதுங் கிளர்ச்சி பெற்றுநின்ற கி.பி. ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் இருந்தவராகலின், அக் காலத்தில் எங்கும் மிக்கு வழங்கிய பொய்கையாழ்வாரது முதற்றிருவந் தாதியைப் பிற்காலத்தவர் புதிது ஆக்கிய அந்தாதிச் செய்யுள் முதலியவற்றிற்கு எடுத்துக்காட்டாகக் குறித்திட்டாரென்க. என்றிதுகாறும் ஆராய்ந்து காட்டிய கொண்டு, இன்னிலை' இயற்றிய பொய்கையார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும், 'முதற்றிருவந்தாதி' பாடிய பொய்கையாழ்வார் கி.பி.எட்டாம் நூற்றாண்டிலும் இருந்தோராவரென்பது முடிக்கப்பட்டமை

காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/295&oldid=1588759" இலிருந்து மீள்விக்கப்பட்டது