உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2 ×

287

இனிக், 'களவழி' பாடிய பொய்கையாரோ, 'இன்னிலை’ பாடிய பொய்கையார்க்கும் முன்னே கி.பி. முதல் நூற்றாண் டிலிருந்தோராவர். அஃது யாங்ஙமெனின், அதனையுஞ் சிறிது விளக்கிக் காட்டுதும்: இப் பொய்கையார் சேரமான் கோங்கோதை மார்பன்' காலத்தவரென்பது அவர் பாடிய "கோதைமார்பிற் கோதையானும்” என்னும் புறப்பாட்டால் (48) நன்கு விளங்கும். பழையன் மாறன் என்போன் “மாடமலி மறுகிற் கூடல்” நகரிற் கிள்ளி வளவனைப் போரிற்

றொலைத்தமை கண்டு, இக்கோக்கோதை மார்பன் பெரிதும் உவந்த வரலாற்றினை நக்கீரனார் அகநானூற்றில் (346) எடுத்துப் பாடியிருக் கின்றனர். இன்னும், இவர் 'பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனை” “ஏற்றுவலன் உயரிய” என்னும் புறப்பாட்டில் (56) முன்னிலைப் படுத்துப் பாடியிருத்தல் கொண்டு அவ் வரசனும் வரும் ஒரு காலத்தினரென்பதுந் துணியப்படும். இவ்வரசனையே இடைக்காடனார் என்னும் நல்லிசைப்புலவரும் “ஆனா வீகை" என்னும் புறப்பாட்டில் (42) முன்னிலைப்படுத்துப் பாடியிருத் தலால் அவரும் இப் பாண்டியன் காலத்தவ ரென்பது புலப்படும். இவ் விடைக்காடனாருங் கபிலருந் தோழர் என்பது “பின்னமில் கபிலன் தோழன் பெயரிடைக் காட னென்போன் (நம்பியார் திருவிளையாடல்,20,1) என்பதனால் அறியப்படும். இவ்வாற்றால் நக்கீரனாரும் இடைக்காடனாரும் காலத்தவரென்பது பெறப்படுதலானும், 'அகநானூற்'றில் (78) நக்கீரனார் ‘கபிலரைப்' புகழ்ந்து பாடியிருத்தலோடு அதன் 141 ஆஞ் செய்யுளிற் 'சோழன் கரிகாற்பெருவளத்தான்’றன் இளமைக் காலத்துச் செய்தியைக் கூறுதலானும் கபிலர், இடைக்காடனார், நக்கீரனார், 'களவழி' பாடிய பொய்கையார் என்னும் இந் நல்லிசைப் புலவர்களெல்லாருஞ் சிறிதேறக் குறைய ஒரு காலத்தினரென்பது பெறப்படும். அற்றாயினுங், கபிலர் ‘சோழன் கரிகாற்பெருவளத்தான்' காலத்தில் இருந்தில ரென்பதனை மேலே விளக்கிக் காட்டினமாதலானும், நக்கீரனார் அச் சோழவேந்தனது ளமைக்காலத்தில் இருந்தமை புலனாதலானும் கபிலர் ஆண்டின் மிக முதியாரயிருந்தபொழுது, நக்கீரனாரும் பொய்கையாரும் நடுத்தர ஆண்டினராயிருந்த, நக்கீரனார் சோழன்

ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/296&oldid=1588760" இலிருந்து மீள்விக்கப்பட்டது