உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னும்,

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

289

ஏனையாழ்வார்கள் சுந்தரர்க்குப் பின்னும் இருந்தோராதலை மேலே பலவாற்றானும் ஆராய்ந்து விளக்கி நிறுவினமாகலின் என்பது. இனிச், சைவசமயாசிரியரும் வைணவ ஆழ்வாரும் ஒருவர் மற்றொருவர் பாட்டுக்களைப் பாராமலே அங்ஙனம் பாடினாரெனல் ஆகாதோவெனின்; அதுவும் ஆகாது; ஒன்றற்கொன்று பெரிது விலகிக் கிடக்கும் நாடுகளில் ஒருவரையொருவர் அறியக்கூடாவாறு அவர் தனித்தனியே இருந்தனராயின், அவர் ஒருவரையொருவர் பின்பற்றாது பாடினாரெனலாம். வைணவ ஆழ்வார்கள் ஐரோப்பா தேயத்திலும் சைவ ஆசிரியர் தமிழ்நாட்டிலும் இருந்து ஒருவரையொருவர் அறியக்கூடாத நிலைமையினராய் வைகி அப் பதிகங்களை அருளிச்செய்தனரென்று கொள்வார் எவரும் இன்மையினானும், அவரெல்லாரும் ஒன்றற் கொன்று மிக அணித்தாயுள்ள இத்தென்றமிழ்நாட்டின் ஊர்களுள்ளேயே வைகியிருந்து இந்நாட்டவர் வழங்கிய செந்தமிழ் மொழியிலேயே தத்தம் பதிகங்களை அருளிச் செய்தாரென்பது எவரும் நன்குணர்ந்ததே யாகலானும், அவருட் பிற்காலத் திருந்தவர் முற்காலத்திருந்தார் செய்யுண் முறைகளைப் பாராமலும் பின்பற்றாமலும் பாடினாரெனல் உலகியலறிவு வாய்ப்பப்பெறாதார் கூறும் பொருத்தமில் உரையேயாம். மேலுஞ், சிவபிரான் வழிபாடும், திருமால் வழிபாடும் இத் தென்றமிழ் நாடெங்கும் பண்டுதொட்டு நடைபெற்றுத் தமிழ்மக்கட்குப் பொதுவாய்ப் பெரிது பரவியிருத்தலின், அவ் விருவகை வழிபாடுகளையும் வலியுறுத்தி அக் கடவுளர்மேற் பாடிய சான்றோர் பாட்டுக்கள் இந் நாடெங்குமுள்ளாராற் பாராட்டப்பட்டு எவர்க்குந் தெரிந்தனவாய்ப் பரவி வழங்குவனவே யல்லாமல், எவர்க்குந் தெரியாமல் அரிதுணர் மறைபொருளாய் ஒரு மூலையில் இருப்பன அல்ல. ஆகவே, சைவசமய ஆசிரியர்கள் காலத்தால் முற்பட்டவராகலின் அவர்கள் அருளிச்செய்த தேவார திருவாசகப் பாடல்கள் இத் தமிழ்நாடெங்கும் பரம்பி வழங்கினவாய் எவர்க்குந்

தரிந்தன வாயே யிருப்பவாகலான், பின்வந்த ஆழ்வார்கள் அவற்றை நன்கு பயின்று, அவற்றைப் போல் தாமுந் திருமால்மேற் பாடவிழைந்து அவ்வாறே செய்தது

யற்கையேயாம். ஆதலால், அவ் விருபாலாரும் ஒருவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/298&oldid=1588763" இலிருந்து மீள்விக்கப்பட்டது