உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

மறைமலையம் - 23

யொருவர் அறியாமல் தனித்தனியே பாடினாரென்றலும் ருசிறிதும் ஒவ்வாததென விடுக்க.

நன்கு

இனித், திருமங்கையாழ்வார் தேவார திருவாசங்களை பயின்றவரென்பதற்குச் சில குறிப்புகள் ஈண்டுக்

காட்டுகின்றாம். திருவாசகத்தில்,

நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப் பகலோன்

புலனாய் மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்

எனவும், அப்பர் தேவாரத்தில்,

இருநிலனாய்த் தீயாகி நீரும் ஆகி

இயமான னாய்எரியுங் காற்று மாகி

(திருத்தோணோக்கம், 5)

(பொது)

எனவும் வருமாறுபோற், சம்பந்தர் சுந்தரர் தேவாரங்களிலும் வரும் பாடல்கள் பலப்பல. இவற்றோடொப்பவே திருமங்கை யாழ்வார்,

பாரும் நீர்எரி காற்றினோ டாகாசமும்

இவையாயினான்

எனப் பாடினமை காண்க.

திருவாசகத்தில்,

ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றும்இலார்க்கு ஆயிரந் திருநாமம் பாடிநாந் தெள்ளேணங் கொட்டாமோ

எனவும், தேவாரத்திற்,

பிறப்பில் பெருமானை

(1, 8, 7)

(திருத்தெள்ளேணம், 1)

(கோயில், 2)

எனவும் அடுத்தடுத்துவருஞ் சொற்றொடர்களைத் திருமங்கை யாழ்வார்,

பேரும் ஆயிரம் பேசநின்ற பிறப்பிலி

(1.8.7)

எனத் தஞ்செய்யுளுள் எடுத்தாளுதல் காண்க.'பிறப்பிலி' என்னும் பெயர் சிவபெருமான் ஒருவற்கே பொருந்துவ தன்றிப், பத்துப் பிறவிகளுடையரென வைணவரே ஒப்புக் காண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/299&oldid=1588764" இலிருந்து மீள்விக்கப்பட்டது