உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

291

திருமாலுக்குப் பொருந்தாதாகவும், சைவசமய ஆசிரியர் கூறுமாறுபோல் தாமுந் தங்கடவுளுக்குக் கூறவிழைந்து திருமங்கையாழ்வார் 'பிறப்பிலி' எனும் அப்பெயரைத் திருமாலுக்கும் ஏற்றிப் பாடினார். வைணவ ஆசிரியராகிய வில்லிபுத்தூராழ்வார்,

“பிறப்பிலி இறப்பிலி பிறங்க லரசன்றன் மகளார் நாதன்”

(மாபாரதம்)

என அச்சொற்றொடரைச் சிவபெருமாற்கே உரித்தாக்கிக்

கூறுதலும்

உற்றுநோக்கற் பாற்று.

இன்னும் அப்பர்,

திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகில்

என்றருளிச் செய்தாற் போலவே, திருமங்கையார்,

திருநாமம் எட்டெழுத்துஞ் சொல்லிநின்று

என்று ஓதுதல் காண்க.

இனிச், சுந்தரமூர்த்திகள் “பொன்னார் மேனியனே'

என்னும் பதிகத்தில்,

எம்மான் எம்மனையென் றனக்கெட்டனைச் சார்வாகார் இம்மா யப்பிறவி பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன் மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே

அம்மான் நினையல்லால் இனியாரை நினைக்கேனே.

(பொது)

(1,8,9)

என்றருளிச் செய்த செய்யுளின் இசையையும் பொருளையுந் தழுவித் திருமங்கையார்,

தாயே தந்தையென்றுந்

தாரமேகிளை மக்களென்றும்

நோயே பட்டொழிந்தேன்

உன்னைக் காண்பதோர் ஆசையினால்

வேயேய் பூம்பொழில்சூழ்

வீரையார் திருவேங்கடவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/300&oldid=1588765" இலிருந்து மீள்விக்கப்பட்டது