உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மறைமலையம் - 23

292

நாயேன் வந்தடைந்தேன்

நல்கியாளென்னைக் கொண்டருளே

எனப் பாடினமை காண்க.

(1, 9, 1)

இன்னுந் தேவார திருவாசகங்களுள் அடுத்தடுத்துக் காணப்படும் “பந்தணைவிரலி” (அப்பர், திருவாவடுதுறை: 10:

திருவாசகம்,

திருப்பள்ளியெழுச்சி,8)

சொற்றொடரைத் திருமங்கையார்,

பந்தணை மெல்விரலாள் பாவைதன் காரணத்தால்.

என எடுத்தாண்டமை காண்க.

66

என்னுஞ்

(2, 2, 4)

இனி, அப்பர் "குரவைகோத்தவனும்" (பொது) என்றும், குடமாடி” (திருக்கோடிகா) என்றுங் கண்ணனுக்கு வழங்கிய பெயர்களைத், திருமங்கையார்,

குரவை முன்னே கோத்தானைக்

குடமாடு கூத்தன் றன்னை

(2, 5, 4)

என்று தமது செய்யுளில் எடுத்தாண்டமை காண்க.

மீளா அடிமை உமக்கே யாளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தான் மிகவாடி ஆளாயிருக்கும் அடியார்தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே என்றருளியபடியே திருமங்கையாரும்,

ஆசை வழுவாதேத்தும் எமக்கிங் கிழுக்காய்த் தடியோர்க்குத் தேசம் அறிய உமக்கே யாளாய்த் திரிகின் றேமுக்குக் காசின் ஒளியில் திகழும் வண்ணங் காட்டீர் எம்பெருமான் வாசிவல்லீர் இந்த ளுரீர் வாழ்ந்து போம்நீரே

என்று பாடியிருத்தல் கண்டுகொள்க. இனி,

அளவறுப்பதற்கு அரியன் இமையவர்க்கு

அடியவர்க்கு எளியான்

(4,9,4)

(திருச்சதகம், 35)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/301&oldid=1588767" இலிருந்து மீள்விக்கப்பட்டது