உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

  • மறைமலையம் - 23

8

தம்முடைய பதிகங்களைப் பாடினாரெனவும் இவர் உண்மையை நடுநிலை திறம்பாமல் எடுத்துக்கூறினார். இங்ஙனமாகத் தேவார திருவாசங்களை நன்கு பயின்ற ஆழ்வார்களெல்லாரும் நாலாயிரப் பிரபந்தப்பதிகங்களைப் பாடினரென்னும் முடிபு இதுகாறும் யாம் விரித்து விளக்கிய ஆராய்ச்சியால் நன்கு விளங்குவதோடு, வைணவரில் நன்கு கற்று நடுநிலை வழுவாது நிற்பார்க்கும் உடன்பாடா யிருத்தலின், இவ்வுண்மைக்கு முற்றும் மாறாகத் ‘திருவாதவூரடிகள் ஆழ்வார்கள் பாடிய நாலாயிரப் பிரபந்தத்தைப் பார்த்தே திருவாசகம் பாடினார்' என 'தமிழ் வரலாறுடையார்’ உரைத்தது பெரும்புரட்டுப் பொய்யுரையாமென உணர்ந்து கொள்க. மேலும், வைணவப்புலவர்கள் கட்டி வைத்திருக்குங் கதைகள் பெரும்புளுகு மலிந்தனவா யிருத்தலின், அவற்றிக்குத் தக்க அகச்சான்று புறச்சான்றுகள் காணப்படினன்றி அவற்றைப் பற்றுக்கோடாகக் கொண்டு உண்மை ஆராயப்புகுதல் அவ் வுண்மைக்கு மாறான பொய்ப்பொருளில் வழுக்கிவிடும் என்பதும்இஞ் ஞான்றை வைணவப் பெரியார்க்கே உடன்பாடா யிருப்பவும், அஃதுணராது அப் பொய்க்கதைகளை உண்மையாக நம்பி அவர் தம் வரலாறு சால்லப்புகுந்த 'தமிழ் வரலாறுடையார்’ அவ்வாற்றால் வழுக்கி வீழ்ந்து புரைப்பட்டது பெரிதும் இரங்கற்பால தொன்றாமென விடுக்க.

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

அடிக்குறிப்புகள்

தொல்காப்பியம், செய்யுளியல், 158.

See Gita and Gospel' by Dr. J.N. Farquhar.

1908இல் சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் திரு.உ.வே.கோபாலசாரியாராற் பதிப்பிக்கப்பட்ட ‘நாலாயிரப் பிரபந்தப் படியைப் பார்க்க. தொல்காப்பியம், செய்யுளியல், 239, நச்சினார்க்கினியம்.

அதுவே, 240.

No necessity for an essay of this kind should have occurred, had there been at least one reliable and faithful biography of the Vaishnava Saints” p.296, 'Tamil Studies'.

In our opinion some of the historical accounts given in the Periya - purana are comparatively more trustworthy, as the Saivas do not assign fabulous ages to their Nayanars, pp.298. Tamil Studies, by Mr.M.Srinivasa Aiyangar, M.A.

Ibid, p. 324.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/305&oldid=1588771" இலிருந்து மீள்விக்கப்பட்டது