உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மறைமலையம் -23

இனி, ஈண்டெடுத்துக் காட்டிய இவ்விருவகைக் கோட்பாடுகளுள் மாணிக்கவாசகர் மாயாவாதக் கோட்பாடு உடையரோ, அன்றிச் சைவசித்தாந்தக் கோட்பாடு உடையரோ என்பது ஆராயற்பாற்று மாயாவாதிகள் பிரமத்தைத் தவிர வேறேதொரு பொருளும் இல்லையென்பர்; சைவசித்தாந்திகள் சிவமும் உயிர்களும் உயிர்களைப் பொதிந்த மும்மலங்களும் எக்காலத்தும் உண்டென்பர். சைவசித்தாந்த முதலாசிரியரான திருமூலர்.

“பதிபக பாசம் எனப்பகர் மூன்றிற் பதியினைப் போற்பசு பாசம் அநாதி பதியினைச் சென்றணு காபசு பாசம் பதியணு கிற்பசு பாசம்நில் லாவே”1

எனவும், அவர்க்குப்பின் சந்தான குரவரில் முதல்வரான ஆசிரியர் மெய்கண்ட தேவர்,

"நெல்லிற் குமியும் நிகழ்செம்பினிற் களிம்புஞ் சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி மலகன்மம் அன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள் அலர்சோகஞ் செய்கமலத் தாம்”

எனவும்,

”2

"ஒன்றென்ற தொன்றேகாண் ஒன்றே பதிபசுவாம் ஒன்றென்ற நீபாசத் தோடுளை காண்’3

எனவும் அருளிச்செய்தமை காண்க. இவற்றிற்கு இசையவே

திருவாதவூரடிகளும்.

“வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று

போதுநான் வினைக்கேடன் என்பாய் போல இனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை ஆட்கொண்டுஎம் பிரான் ஆனாய்க்கு’

என்று அருளி செய்தார் மலத்தின் இயல்பு அம் மலத்தையுடைய உயிர்கள் செய்யும் வினையாலன்றி அறியப்படாமையின், தொல்லாசிரியரெல்லாரும் ‘மலத்திலே கிடத்தலை' வினையிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/41&oldid=1588294" இலிருந்து மீள்விக்கப்பட்டது