உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2 ×

33

கிடத்தலாகவே பெரும்பான்மையும் உரையாநிற்பர். உயிர்கள் தொன்றுதொட்டு வினையிலே கிடக்கும் உண்மையை ஈண்டு அடிகள் தம்மேலேற்றி “வினையிலே கிடந்தேனை” என்றார். இயற்கையிலேயே சிவபிரான் மலத்தினாலும் அதன் வழிவரும் வினையினாலும் பற்றப்படாமலிருந்து ஏனை உயிர்களின் மலவினையைக் கெடுத்தலின் அவனை “வினைக்கேடன்” என்றார். சிவபிரானது முழுமுதற் றன்மையை அறியமாட்டாது. அறியாமையிற் கிடக்குஞ் சிற்றுயிர்கட்கு அவனே அவை தமக்கு அறிவித்தலான்றி அவை அவன்றன் முதன்மைத் தன்மையை உணரமாட்டாவென்பது தெரிப்பார். “இனையன் நான்' என்று உன்னை அறிவித்து" என்றார். அங்ஙனம் அவன் அறிவிக்க அறிந்தவழிச், சிவபிரான் எல்லா அறிவும் எல்லா இன்பமும் ஒருங்குடையனாய். எல்லா உலகங்களையும் எல்லா உயிர் களையுந் தனக்கு உடைமையும் அடிமையுமாக உடைய ஆண்டவனாதலும், ஏனைச் சிற்றுயிர்களெல்லாம் அவனருளால் அறிவுவிளங்கி அவனைத் தலைக்கூடி அவனது பேரின்பத் திற்படிந்து அவனுக்கு அடிமைகளாதலுந் தெளிப்பார் “என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு” என்று கூறினார். ங்ஙனமே, செந்தமிழ்த் தொல்லாணை நல்லாசிரியரான தொல்காப்பியனாரும்,

“வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூல் ஆகும்”5

என்று இறைவனியல்பு மலவினையின் இயற்கையே நீங்கி விளங்கும் அறிவினதாலும், மலவினையிற் கட்டுண்டு அறியாமையிற் கிடக்கும் ஏனைச் சிற்றுயிர்கட்கு அறிவு கொளுத்துவான் வேண்டி அவன் முதல்நூல் அருளிச் செய்தலும் நன்கு தெருட்டினமை காண்க. மெய்கண்ட தேவரும்,

66

“அறிவிக்க அன்றி அறியா உளங்கள் செறியுமாம் முன்பின் குறைகள்”

996

என்று இறைவனியல்பும் ஏனைச் சிற்றுயிரி னியல்பும் நன்குணர வைத்தாரென்க. அகத்தே உயிர்களின் அறிவை மறைக்கும் மலமும், புறத்தே அவ் வுயிர்களின் கட்புலனை மறைக்கும் இருளும் ஒன்றே யாகலின், மலத்தை ‘இருள்' எனவும், அஃது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/42&oldid=1588295" இலிருந்து மீள்விக்கப்பட்டது