உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மறைமலையம் - 23

""

அறியாமையைச் செய்தலின் ‘அஞ்ஞானம்' எனவும், அம் மலம் சிவத்தைத் தலைக்கூட வொட்டாது உயிர்களைக் கயிறுபோற் கட்டி நிற்றலின் அதனைப் ‘பாசம்’ எனவும் கலக்கத்தை உயிர்கண்மாட்டு வருவித்தலின் 'மலம்' எனவும், அதனால் உயிர்கள்பால் நிகழும் வினைகள் கொடியவா யிருத்தலிற் கடியவினை' எனவும், அது தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றியிருத்தலிற் 'பழமலம்' 6 எனவும், அஃதெல்லாத் துன்பத்திற்கும் முதலாயிருத்தலிற் ‘பாசவேர்' எனவும், அடிகள் ஆண்டாண்டு ஓதுதலை, “வல்வினையேன் றன்னை மறைந்திட மூடிய மாய இருளை,” (சிவபுராணம், 50,51). “என்னுடையிருளை ஏறத்துரந்தும்” (கீர்த்தித்திருவகவல். 6). “அவன் வாங்கியஎன், பாசத்திற் காரென்று அவன் தில்லையின் ஒளிபோன்று (திருக்கோவையார். 109), “அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே" (சிவபுராணம் 40). “பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே" (சிவபுராணம், 64). “பாசத்தளையறுத்து ஆண்டு கொண் டோன்" (திருக்கோவையார். 115), “கடலின்திரை யதுபோல்வரு கலக்கம்மல மறுத்துஎன், உடலும் எனது உயிரும்புகுந்து ஒழியா வண்ணம் நிறைந்தான்" (உயிருண்ணிப் பத்து.6). “கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப், பழமலம் பற்றறுத்து ஆண்டவன்” (திருப்பாண்டி பதிகம். 8), “பாசவேர் அறுக்குகம் பழம்பொருள் தன்னை” (பிடித்த பத்து.7) என்றற் றொடக்கத்துத் திருவாசகம் திருக்கோவையார் அருளுரைகளிற் கண்டுகொள்க. உயிர்களைப் பொதிந்த இம் மலத்தினியல்பைக் கூறுகின்றுழி, அடிகள் உடனே சிவத்தினியல் பையும் “நல்லறிவு”, “என் உடலும் எனது உயிரும் புகுந்து ஒழியா வண்ணம் நிறைந்தான்,” “கழிவுஇல் குருணை,” “பழம் பொருள்,” 'அவன் தில்லையின் ஒளி" என்றற் றொடக்கத்து அடை மொழிகளால் இனிது விளங்கவைத்தமையும் பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாலதாகும். இவ்வாற்றாற் பழம்பொருளாகிய சிவம் எஞ்ஞான்றும் நல்லறிவினதாதலும், மலந்தீர்ந்த உயிர் தன்முதல் கெட்டுப்போகாமல் நிற்க அதன்உடம்பிலும் உயிரிலும் அச்சிவம் புலப்பட்டுத் தோன்றி அதன்கட் பிரிவின்றி நிறைந்து விளங்குதலும் அஃது எஞ்ஞான்றும் நீங்காத அருளுடையதாய் உயிர்களின் மலத்துன்பத்தை நீக்கி அவற்றிற்குத் தன் பேரின்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/43&oldid=1588296" இலிருந்து மீள்விக்கப்பட்டது