உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

35

பத்தை வழங்குங் குறிப்புடைத்ததாலும், அஃது அன்பர்க்கு அருள்செய்தற்பொருட்டு நிறைந்து நிற்குந் தில்லையாகிய அறிவு வெளி (சித் அம்பரம்) ஒளிவடிவிற் றாதலும் அடிகள் நன்கு தெருட்டியருளினார். இவ்வாறு காட்டியவற்றுள், உயிருஞ் சிவமும் தனித்தனி முதல்களாதலும், உயிர் மும்மலப்பற் றுடையனவாய்த் தொன்று தொட்டிருப்பச் சிவம் இயற்கையே

ளங்கிய தூயஅறிவும் அருளும் உடையத்தாய் யாண்டும் நிறைந்து நிற்றலும், அஃது உயிர்களை மும்மலப் பற்றினின்றும் விடுவித்து அவை தம்முள் முனைத்து விளங்கி அவை தம்மைத் தனது சிவவுருவாக்குதலும் நன்கு பெறப்பட்டமையால் மாணிக்கவாசகப் பெருமான் தெள்ளத் தெளிந்த சைவ சித்தாந்தச் சான்றோரே யாதல் ஐயுறவின்றித் துணியப்படும். மும்மலப் பிணிப்பினின்றும் விடுவிக்கப்பட்ட தூய உயிர்கள் பாற் சிவம் முனைத்துத் தோன்றி அவை தம்மைத் தன்னுள் அடக்கித் தன்னையே காட்டிநிற்கும் மென்பது சைவசமய ஆசிரியர் ஏனையோர்க்கும் உடம்பாடாம்; அது.

“சுத்தச் சிவனுரை தானதிற் றோயாமன் முத்தர் பதப்பொருண் முத்திவித் தாம்மூலம் அத்தகை ஆன்மா அரனை அடைந்துஅற்றாற் சுத்த சிவம்ஆவ ரேசுத்த சைவரே.

وو

“அனாதி சீவன்ஐம் மலம்அற்று அப் பாலாய்

அனாதி யடக்கித் தனைக்கண்டு அரனாய்த் தனாதி மலங்கெடத் தத்துவா தீதம்

(திருமந்திரம், 1414)

வினாவுநீர் பாலாதல் வேதாந்தத் துண்மையே.” (திருமந்திரம், 2362)

“உயிரைப் பரனை உயர்சிவன் றன்னை

அயர்வற் றறிதொந் தத்தசி யதனாற்

செயலற் றறிவாகி யுஞ்சென் றடங்கி

அயர்வற்ற வேதாந்த சித்தாந்த மாமே'

என்று திருமூலநாயனாரும்,

(திருமந்திரம், 2363)

“எம்பிரான் என்ற தேகொண் டென்னுளே புகுந்து நின்றிங்கு எம்பிரான் ஆட்ட ஆடி என்னுளே உழிதர் வேனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/44&oldid=1588297" இலிருந்து மீள்விக்கப்பட்டது