உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மறைமலையம் - 23

எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால் எம்பிரான் என்னின் அல்லால் என்செய்கேன் ஏழை யேனே

என்று திருநாவுக்கரசு நாயனாரும்,

“திகழ்ந்தமெய்ப் பரம்பொருள், சேர்வார்தாமே

(தேவாரம், பொது)

தானாகச் செயுமவன் உறையுமிடம்" (திருப்பிரமபுரம், பந்தத்தால், 7)

என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயானரும்,

“நான்அவன் என்று எண்ணினர்க்கு நாடும்உளம் உண்டாதல் தான்எனஒன்று இன்றியே தான்அதுவாய் - நான்என ஒன்று இல்லென்று தானே எனும்அவரைத் தன் அடிவைத்து இல்லென்று தானும் இறை”

(சிவஞானபோதம், 10, 1, 1)

என்று ஆசிரியர் மெய்கண்ட வேத நாயனாரும் ஓதிய வாற்றால் நன்குதெளியப்படும். திருமூலர் 'வேதாந்தம்' என்றது உபநிடதங்களை, தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்.

“பற்றுக பற்று அற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.”

“இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசுஅறு காட்சி யவர்க்கு.’

66

சார்புஉணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்."

என்று அருளிச் செய்தனவும் இக் கருத்தேபற்றி வந்தன. சிவத்தின் திருவடியைச் சேர்தல் என்பதூஉம் அவன் றிருவருளிற் படிதலேயன்றிப் பிறிதன்று. அடிகளும்,

“தென்னன் பெருந்துறையான்

காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித்

தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி.” (திருவம்மானை. 6)

என்று அருளிச்செய்ததூஉம் காண்க. இறைவனது திருவுருவம் பருப்பொருளால் ஆக்கப்படாமல், மிக நுண்ணிய அவன்றன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/45&oldid=1588298" இலிருந்து மீள்விக்கப்பட்டது