உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2 ×

37

அருளால் ஆவதாம். ஆகவே, அவன்றன் றிருவடி ஏனை மக்கள் தேவர்க்கு மாயையிற் றிரட்டப்பட்ட அடிகள்போல் ஓர் இடத்தைப்பற்றி நிற்பன அல்ல; அவை யெல்லையில்லாத பரப்பையெல்லாம் ஊடுருவிக் கொண்டு எல்லா உயிர்கண் மாட்டும் நிறைந்திருப்பனவாம். ஆகையால், யாண்டும் நிறைந்து நிற்கும் சிவத்தோடு, தூய உயிர்கள் கலந்து நிற்குமென்று உரைப்பினும், அல்ல தவன் திருவடியை அவை சார்ந்துநிற்கு மென்று உரைப்பினும் இரண்டும் ஒன்றேயாம்; வேறுபாடு சிறிதுமில்லை. க் கருத்துப்பற்றியே ஆசிரியர் மெய்கண்ட

தேவர்,

“பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும் எண்ணுஞ் சுவையும்போல் எங்கும் ஆம் அண்ணல்தான்.”7

என்றதூஉம், தெய்வத் திருவள்ளுவர்,

“மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்.”8

என்றதூஉம்.

சங்கப்புலவரான நக்கீரனார்,

“சேவடி படருஞ் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையுஞ் செலவு”9

என்றதூஉம் என்க. இந் நுண்பொருளுண்மை தேற்றுஞ் சைவசித்தாந்தம் உணராதார், தாம் பருப்பொருளிற் பயின்ற பயிற்சியேபற்றி இறைவன் றிருவடியைச் சேர்தல் என்பது உயிர்கள் அவனோ டொன்றாகாமல் வேறுவேறாய் நிற்குந் துவிதமாமென்றும், சிவமாதல் என்பது அவை முதல்கெட்டுச் சிவமாயிருக்கும் அத்துவிதமாமென்றும், அப்பர் திருஞான சம்பந்தர் சுந்தரரெல்லாந் துவித முத்தியையே யோதுவ ரென்றும், மாணிக்கவாசகரோ மாயாவாத அத்துவித

முத்தியையே கூறுவரென்றும் தமக்கு வேண்டியவாறெல்லாம் உரைப்பர்; இவர் இவ்வாறன்றி மற்றென் செய்வர்! சிவம் ஒன்றாயே ஒழியாமலும், சிவத்தின் வேறாய்த் தனித்து நில்லாமலும் பாலோடு அளாயநீர்தன் முதல்கெடாமல் அப் பாலின் தன்மையாய் அதனுடன் பிரிவறக் கலந்துநிற்றல்போல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/46&oldid=1588300" இலிருந்து மீள்விக்கப்பட்டது