உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

  • மறைமலையம் - 23

ஒளிவடிவாயே காணப்படும். பல்வகை வடிவும் நிறமும் உடைய அம் மலர்கள் அப்போது அப்பளிங்கின் மருங்கேயிருந்தும், அவற்றின் அவ்வடிவும் நிறமும் அதன்கட் சிறிதுந் தோன்றா; அப்பளிங்கின் இடமெல்லாம் முழுதும் பகலவனொளியாற் கவரப்பட்டபடியாகவே இருக்கும். இந்நிலையிற் கதிரவனும், கதிரவனொளியால் முழுதுங் கவரப்பட்ட பளிங்கும். அப்பளிங்கின் பக்கத்தே பல்வேறு வகைப்பட்ட மலர்களும் உள்ளவே யல்லாமல், அவற்றுள் ஒன்றாயினும் இல்லா தொழிந்ததின்று காலைப் பொழுதிற் பளிங்கினுட் பகலவ னொளியோடு விரவித் தோன்றிய அம் மலர்களின் வடிவும் நிறமும், உச்சிப்பொழுதில் அதன்கட் காணப்படாவாய்ப் போகப் பகலவன் ஒளியே அதன்கண் முழுதுமாய்த் தோன்றும். அத்துணையே வேறுபாடல்லது. முன்னும் பின்னும் அப்பொருள்கள் சிறிதும் இல்லையாய் ஒழிந்தில. இந் நிகழ்ச்சியோடு ஒப்பவே இறைவனது அருட்பேற்றின் நின்றார் நிலையும் உள்ளதென அறிதல் வேண்டும். இறைவனருளாற் பற்றப்பட்டார்க்கு ஆணவஇருள் ஒழிந்ததாயினும், அவ்வருள் விளக்கம் முறுகி அவர்மாட்டு முனைக்குங் காறும், உடம்பும் அது வாயிலாக வரும் இருவினைகளும் அவர்க்கு உளவாம். அங்ஙனம் அவை உளவாயினும், பகலவன் வானுச்சியில் ஏறுந்தோறும் பளிங்கினுள் விளங்கித் தோன்றும் மலர்களின் வடிவும் நிறமும் அம்முறையே அணு அணுவாய்க் குறைந்து கொண்டு வந்து, அவன் நேர் உச்சியில் வந்தவளவானே அவை முற்றும் அதன்கட் காணப்படுதல் இல்லையாய் ஒழிதல்போல, இறைவனதருள் விளக்கம் முதிருந்தோறும் முதிருந்தோறும் அவ்விளக்கம் மிகப் பெறுவார்க்குள்ள மாயை வினைகளின் பற்றும் அம்முறையே அணு அணுவாய்த் தேய்ந்து, பின் அவ் விளக்கம் அவருயிரை முழுதுமாய்த் தேய்ந்து, பின் அவ் விளக்கம் அவருயிரை முழுதுமாய்க் கவர்ந்து அதனைத் தன் வடிவாக்கிய துணையானே அப் பற்றும் அவர்பால் முற்றும் இல்லையாய் ஒழியும். வ்வாறு அணு அணுவாய்த் தேய்ந்தொழிவது மாயை வினைகளின் பற்றேயல்லாமற் பிறிதன்றென்பது மேற்காட்டிய உவமையானும் நன்கு விளங்கும். அங்ஙனம் அருட்பேறு ஒன்றே யுடையராய் அடியார் நிற்கும் அவ் வீட்டுநிலையிற் கடவுளும் உண்டு. அவனருளைத் தலைக்கூடி நிற்கும் அடியாரின் உயிரும் உண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/53&oldid=1588308" இலிருந்து மீள்விக்கப்பட்டது