உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

43

பேற்றை எய்தி, விரைவில் அவனோடு இரண்டறக் கலக்கப் போகுந் தூயஉயிரின்கண் நிகழும் நிகழ்ச்சியோடு பொருத்திப் பார்த்தல் வேண்டும். இவ்வுலகத்தில் உள்ளஞான்றே தூயதான உயிரின்முன் இறைவன் சொல்லொணா அருளொளியோடு தோன்றுதலும், இதற்குமுன் அவ்வுயிரின் அறிவுக்கண்ணைப் பொதிந்திருந்த ஆணவ மலவல்லிருள் பெரும்பான்மையும் மறைந்துபோக அவ்வருளொளியின் உதவியால் அவ்வுயிர் தன்னையும் தன்னிறை வனை ஏனை ஏனையெல்லாப் பொருள் நிகழ்ச்சிகளையும் காண வல்லதாகின்றது. அங்ஙனமாயினுந் தான் உடம்போடு கூடி நிற்றலால், அவ்விறைவனொளி மேலெழுந்து தன்னுயிரில் முழுதுந் தோயுங்காறுந் தன்னுடம் பாகிய மாயாமலத்தையும் அதன் வாயிலாக வரும் இருவினையாகிய நிழலையுந் தன்னொரு பக்கத்தே காணாநிற்கும். மற்று இறைவனொளி மேன்மேல் எழ எழ இருவினையாகிய நிழலும் அணுவணுவாய்த் தேய்ந்து கொண்டே வருமாகலின், பின்னர் அவ்வொளி அவ்வுயிரின் நேர் உச்சியில் வந்த துணையானே அவ்வினை நிழல் முற்றும் அற்றுப் போக, இறைவனது அருளொளி அவ்வுயிரின் எம்மருங்கும் பட்டு மிளிரா நிற்கும்.

L

இவ்வியல்பினைப் பின்னும் ஓர் எடுத்துக் காட்டானும் விளக்குவாம். தூயதொரு பளிங்குக் கண்ணாடியை ஒரு மாளிகையின் மேல்முற்றத்தின் நடுவே வைத்து அதனைச் சூழச் சிவப்பு மஞ்சள் நீலம் முதலான பலநிறங்களுடைய மலர்களை வைத்திடுக. ஒளியில்லாத இராக்காலத்தே அவை இங்ஙனம் வைக்கப்பட்டாற், பளிங்கின் விளக்கமும் அதனைச் சூழ்ந்துள்ள மலர்களின் நிறமும் சிறிதும் புலனாகா மற்றுக் கதிரவன் கீழ்பால் எழுந்தவளவானே இருள் மறைந்து போகாநிற்கும்; போகவே, பளிங்கின் விளக்கமும் அதனைச் சூழ்ந்துள்ள மலர்களின் வடிவும் நிறமும் அவை அதன்கட்டோன்றும் எதிர்த் தோற்றமும் எல்லாம் ஒருங்கே காணப்படும். இன்னுங் கதிரவன் கீழ்பாலிருந்து வானுச்சியிற் சிறிது சிறதா ஏறுந்துணையும் அப் பளிங்கினுட் மலர்களின் வடிவும் நிறமும் சிறிது சிறிதாக் குறைந்துகொண்டே வந்து, கடைப்படியாகக் கதிரவன் அப்பளிங்குக்கு நேர் உச்சியிற் சேர்ந்த துணையானே, அவை முற்றுந் தோன்றாவாய் ஒழிய, அப்பளிங்கு முழுதுங் கதிரவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/52&oldid=1588307" இலிருந்து மீள்விக்கப்பட்டது