உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

66

  • மறைமலையம் - 23

'இன்றுஎனக்கு அருளி இருள்கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று

நின்ற நின் தன்மை நினைப்புஅற நினைந்தேன்

நீஅலாற் பிறிதுமற்று இன்மை

சென்றுசென்று அணுவாய்த் தேய்ந்துதேய்ந்து ஒன்றாம் திருப்பெருந் துறையுறை சிவனே

ஒன்றுநீ அல்லை அன்றிஒன்று இல்லை யார்உன்னை அறியகிற் பாரே'

(கோயிற்றிருப்பதிகம். 7)

என்னும் இச் செய்யுள் முதலடிக்கண்நின்ற உவமையாகிய ‘ஞாயிற்றின் எழுச்சி' இச் செய்யுட்கண் உள்ள நுண் பொருளை விளக்குதற் கருவியாய் நிற்றலின் முதற்கண் அஃது ஆராயற் பாற்று. கதிரவன் கீழ்பாற் றோன்றாமறைநிலா இரவில் எங்குந் திணிந்த இருள் பரம்பி நிற்கின்றது. அவ்விருளில் மக்கள் விழித்திருப்பினுந் தம்மையுங் காணமாட்டுவார் அல்லர். தமக்குப் புறம்பாயுள்ள ஏதொரு பொருளையுங் கூடக் காணமாட்டுவார் அல்லர்; மற்று ஞாயிற்றினொளி அளவுபடா விளக்கத்தோடுங் கீழ்பால் எழுந்த துணையானே முன்னே பரவி இருந்த பேரிருள் கட்புலனாகாதாய் மறைந்துபோக மக்களுங் கண்ணறிவு துலங்கி எல்லாப் பொருளையுங் காணப் பெறுகின்றனர். எனினும், பகலவன் கீழ்பால் நின்று மேலெழுந்து வானில் தலைக்கு நேரே உச்சியில் வருங்காறும் மக்களெல்லாருந் தமக்குப் பக்கத்தே தமது நிழலையும் காண்கின்றனர்; அப்போது அவர்களுடம்பின் எப்பக்கத்தும் ஞாயிற்றின் ஒளி படுவதில்லை; அவ்வொளி ஒருபக்கத்தே மட்டும் படமற்றொருபக்கம் நிழலுடையதாகவே யிருக்கின்றது; ஆயினும் கதிரவன் கிழக்கே தோன்றுங்கால் மிக நீண்டு காணப்படும் மக்களுடம்பின் நிழலானது. அவன் மேன்மேல் எழஎழத் தானும் வரவரத் தேய்ந்து தேய்ந்து சிறுத்துக் கொண்டே போகின்றது. பின்னர்த் தலைக்கு நேரே வான் உச்சியில் அவன் வந்த துணையானே, அவனது பேரொளி மக்கள் உடம்பெங்கும் பட்டுமிளிர அவரது உடம்பின் நிழல் ஒருசிறிதும் ல்லையாய் ஒழிகின்றது.

இவ்வளவுங் கதிரவன் உச்சிப்போதில் வருந்துணையும் நிகழும் நிகழ்ச்சியாம். இந் நிகழ்ச்சியை இனி இவ்வுலகத்தில் இவ்வுடம்போடு கூடியிருக்கும்போதே இறைவன் திருவருட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/51&oldid=1588306" இலிருந்து மீள்விக்கப்பட்டது