உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மறைமலையம் - 23

தம்மோடு உட உடனாய் நிற்குந் தமது உடம்பைப் பற்றிய வுணர்வும் தமக்கு அகக்கருவிகளாய் நிற்கும் மனம் முதலியவற்றைப் பற்றிய வுணர்வும், இறுதியிற்றான் ஒருபொருள் எனத் தன்னைப்பற்றிய வுணர்வும், நிகழாமல் ஒருங்கே கெட்டொழிய வேண்டுதலின், மலமாயை வினைகளின் பற்று ஒழிகின்றுழியே அவற்றோடு உடனாய் நிகழும் இவ்வுணர்வுகளும் அணுவணுவாய் ஒழியுமென்பது பெற்றாம். இவ்வியல்பு, அடிகளே.

“வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல்நீர் மண்கெடினும் தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு ஊன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டேன் னுள்ளமும்போய் நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ

9914

என்று அருளிச்செய்த வாற்றானுந் தெளியப்படும். முடிந்த வீட்டு நிலைக்கண் நிகழும் இம் முடிந்த நிகழ்ச்சியை அறிவுறுத்துதற் கன்றே தெய்வத் திருமூலரும்,

“தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன் வானும் அழிந்து மனமும் அழிந்தபின்

நானும் அழிந்தமை நான் அறி யேனே”15

என இதனை முடிந்த முடிபாய் வைத்து இறுதிக்கண்ணதான ஒன்பதாந் தந்திரத்தில் ஓதினார். இங்ஙனமெல்லாம் புறப்பொருள் அகப்பொருள்களிற் சென்றவுணர்வு அற்றுத் தூயதான உயிர் இறைவனைத் தலைக்கூடுதலை இறைவனடியைத் தலைகூடுத லாகவே வைத்து அதற்கடுத்த

66

"இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப் பொருளிற் பொருளாய்ப் பொருந்தஉள் ளாகி அருளால் அழித்திடும் அத்தன் அடிக்கே உருளாத கன்மனம் உற்றுநின் றேனே

9916

என்னுஞ் செய்யுளுள்ளும் நன்கு விளக்கியருளினார். இறைவ னோடு இரண்டறக் கலக்கும். இம் முடிந்த வீடுபேற்றினை இறைவன் திருவடிப் பேறாகவே சைவசித்தாந்தத் தொல்லாசிரிய ரான திருமூலரும் சைவசமயாசிரியருங் கூறாநிற்க. இதனை ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/55&oldid=1588311" இலிருந்து மீள்விக்கப்பட்டது