உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடை

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

47

சிறிதாயினும் நுணுகியுணரமாட்டாத 'தமிழ் வரலாறு' யார் திருவடிப்பே றொன்றே சைவசமயாசிரியர் வேண்டியதாமென்றும், சிவமாதலாகிய பேறு மாயாவாதம் பற்றி யெழுந்த தொன்றாகலின் அதனைத் தம்மேல் ஏற்றிச் சொல்லிக்கொண்ட மாணிக்கவாசகர் ஏகான்மவாதவாடை வீசப்பெற்றாரென்றுந் தமக்குத் தோன்றியவா றெல்லாங் கூறி இழுக்குற்றார்.

தூயதானவுயிர் இறைவனோடு இரண்டறக் கலந்துவழி, இதற்குமுன் தன்மாட்டு நிகழ்ந்த புறப்பொருளுணர்வு அகப்பொருளுணர்வு முற்றும் அவிந்துவிட, இறைவனதுணர்வு ஒன்றுமே தன்னகத்துத் தலை யெடுத்துநிற்கத் தன்னுணர்வு அதனுள் அடங்கி அதன்வடிவாய் உரைவரம்பிகந்த பேரின்பப் பெருக்கிற் படிந்து வயங்கா நிற்கும்! அங்ஙனம் நிற்குங்கால், தூயதான அவ்வுயிர் தன்முதல் ஒரு சிறிதுங் கெடாமலே இருக்கும் இவ்வுண்மை தெரித்தற்கே,

“முத்திதனில் மூன்று முதலும் மொழியக்கேள்

சுத்தஅநு போகத்தைத் துய்த்தல் அணு - மெத்தவே இன்பங் கொடுத்தலிறை யித்தைவிளை வித்தல்மலம் அன்புடனே கண்டுகொள்அப் பா

9917

என்று அருட்செல்வரான மனவாசகங்கடந்தாரும் அருளிச்

செய்வாராயினர். புறப்பொருள் அகப்பொருள்களோடு ஒருங்கியைந்து அவற்றின்வழித் தோன்றும் உணர்வில் உறைத்து நிற்குங்கால், உயிர் அங்ஙனம் உணருந் தன்னையும் தனக்குள் நிற்குந் தலைவனையும் உணரமாட்டாதாய் அப் புறப்பொருள் அகப்பொருளுணர்வாயே நிற்றல்போல, அதுதான் இறைவ னருளிற் றோய்ந்து அவ்வருளுணர்வாயே நிற்குங்காலும் அவ்வருளுணர்வாய் நிற்குந் தன்னையுணராதாய்த் தன்னை ஊடுருவி நிற்கும் முதல்வனுணர்வாயே நிற்குமென்க. உலகின் வழிப் பதிந்த உணர்வொடு நிற்கும் உயிர்க்குச் சிவம் விளங்காது; சிவத்தின் வழிப் பதிந்த உணர்வோடு நிற்குந் தூயஉயிர்க்கு உலகந்தோன்றாது; இங்ஙனம் இருதிறப்பட்டு நிற்கும் உயிரின்

நிலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/56&oldid=1588313" இலிருந்து மீள்விக்கப்பட்டது