உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

  • மறைமலையம் - 23

“மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்

பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே’18

என்று ஆசிரியர் திருமூலநாயனார் ஓதினமைகொண்டு தெற்றென அறியப்படும். இன்னும் இதனை நாடோறும் எல்லார்க்கும் நிகழும் நிகழ்ச்சியொன்றானும் விளக்கிக் காட்டுதும். நறுமணங் கமழுந் தித்திப்பான தேனை ஒருவன் நன்கு சுவைத்துப் பருகுகின்றுழி, அவனது உணர்வெல்லாம் அதன் இன்சுவையில் ஒன்றுபட்டு அச்சுவை வடிவாய் நிற்றலைக் காண்கின்றேம் அல்லேமோ? அந்நிலையில் அவன் அச் சுவையுணர்வு ஒன்றாயே நிற்பதன்றி. அதனைச் சுவைக்குந் தன்னையாவது, ஏனைப் பிறபொருள்களையாவது, முழுமுதற் கடவுயைாவது பிரித்துணர மாட்டுவான் அல்லன்; அச் சுவையுணர்வு ஒன்றாயே நிற்றல்பற்றி உயிராகிய தானும் இல்லாது ஒழிந்திலன்; அந் நிலையில் தான் ஒருவன் உளனாய் இருந்தும் தன்கட்பிறந்த அச் சுவையின்பத்திற் படிந்து, அவ்வின்பவுருவாயே நிற்பனாயினன்; இச் சிற்றின்ப நிகழ்ச்சிக்கண்ணும் அவனுக்கு அந்நேரத்திற்கு முன்னிருந்த மற்றைப்பொருள் உணர்வுகண்மட்டும் அணுஅணுவாய்த் தேய்ந்து காணப்படாமற் போயினவேயல்லாமல். அவ் வின்பத்தை நுகரும் அவன் அணுஅணுவாய்த் தேய்ந்து இல்லாத வெறும் பாழாய்ப்போயினானல்லான்; எல்லாரிடத்தும் நேரே காணப்படும் இந் நிகழ்ச்சியோடு ஒப்பவே, பெயராப்பேரின்ப முதல்வனோடு தூயதான உயிர் ஒன்று கூடிய வழியும் தான் அவ்வின்பவுருவாய் ஏனையெல்லா வுணர்வுகளையும் அறவே ட்டு அருளுணர்வாய் நிற்குமல்லாமல், தன் முதல்கெட்டு ல்லாத வெறும் பாழாய்ப்போகாதென்றும் அறிந்து கொள்க.

அல்லதூஉம், எம் அறிவால் அறியப்படும் எவ்வகைப் பொருளும் இல்லாத வெறும் பாழாய் ஒழிதல் எஞ்ஞான்றும் இல்லை. அறிவில்லாத பருப்பொருள்கள் அணுவணுவாய்ப் பிரிந்து ஐம்புலனுக்குந் தெரியாமல் மறைதலும், பெயர்த்தும் அவ்வணுக்கள் ஒன்றோடொன்று ஒட்டிப் பல்வேறு உருக்களாக ஐம்புலன்களுக்குத் தோன்றுதலும் ஆகிய ருவேறு நிலைகளை மாறிமாறி எய்தும் அத்துணையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/57&oldid=1588314" இலிருந்து மீள்விக்கப்பட்டது