உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மறைமலையம் - 23

அறியகிற் பாரே” என்பது 'நின்திருவருட் பரப்பில் அடங்கிக் கிடக்கும் மும்மலங்களும் உயிர்களும் என்னும் இவற்றின் இயல்பு அறியாமையுஞ் சிற்றறிவுமா யிருத்தலின் என்றும் நுண்ணிய அறிவுப் பேரொளியாய் வயங்கும் நீ அ அவ்வாறு நின்னுள்ளிருத்தல் பற்றி அவற்றுள் ஏதும் ஆவாய் அல்லை. எல்லாவற்றிற்குங் களைகணாய் நிற்கும் நின்னை யல்லாமல் அவற்றுள் ஏதுந் தாமாகவே தனித்துநிற்க

லதாதலும் எஞ்ஞான்றும் இல்லை. மும்மலக் கட்டில் நிற்கின்ற எல்லையில் நின்னைத் தம்மின் வேறாய் வைத்து முன்னிலைப் படுத்துக் காண்பார்க்கு அவர் காணும் அக் காட்சியினுள்ளாகவே நீ மறைந்திருத்தலின் அவர் நின்னைக் காண்டல் இயலாது. இனி அம் மும்மலக் கட்டின் நீங்கி நின் திருவடிப் பேறெய்தி நின்னருள்வழி நின்று பேரின்பந் திளைத்து நின்னுணர்வினராய் நிற்பார்க்கும் அந் நிலையில் நீவேறு தாம்வேறாய் நின்று காண்டலும் இயலாது. இங்ஙனம் இவ்விருவகை நிலைகளின் நிற்பவரன்றிப் பிறர் இன்மையின், இந் நிலையிலுள்ளார் எவர்தாம் நின்னை அறியமாட்டுவார்! எனவும் பொருள்படுதல் காண்க.

இவற்றுட் 'சிவவுணர்வாய் நிற்றல்' என்பது மலம் மாயை வினை உயிர்கள் என்பவற்றுள் ஒன்றனிடத்தும் ஒரு தினைத் துணையும் நினைவுசெல்லாமற் றன்னையும் நினையாமற், சிவம் ஒன்றையே நினைந்தபடியாய் நிற்றல். உயிர் எப்பொருளை நினைந்தாலும் அப் பொருளின் இயல்பினைத்தான்பெற்று அவ்வுருவாய் நிற்குந் தன்மைத்தாகலின், அது சிவத்தை நினைந்து அந்நினைவு ஒன்றிலேயே உறைத்து நிற்க நிற்க. அது சிவத்தினியல்பைப் பெற்று அவ்வுருவாய் நிற்பதாகின்றது. இஃது இவ்வாறு சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடைத்தாதல் பற்றியே ஆசிரியர் திருவள்ளுவனாயனார் உயிரினியல்பை நீரினியல் போடு ஒப்பிட்டு,

"நிலத்தியல்பால் நீர் திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு

என்றும், தாயுமான அடிகள் அதனைப் பளிங்கினியல் போடு ஒப்பிட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/59&oldid=1588316" இலிருந்து மீள்விக்கப்பட்டது