உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் “யாதொன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று பந்தமறும் பளிங்கனைய சித்து நீயுன்

பக்குவங்கண் டறிவிக்கும் பான்மை யேம் யாம்’20

2

51

என்றும் அருளிச் செய்வாராயினர். இவ் வுண்மையினையே தெய்வத் திருமூலரும் “திருவடிஞானஞ் சிவம் ஆக்குவிக்கும்”21 என்று தேற்றியருளினார். இங்ஙனம் இறைவனியல்பைத் தன்னியல்பாகத் கருதினாலன்றி உயிர் தன்னைப் பொதிந்த மலக்கட்டு அறப் பெறாது சிற்றினத்தாரோடு சேர்ந்து அவர்க்குரிய களவு கட்குடி சூது முதலான தீவினைகளிற் பயின்றான் ஒருவன் அவருள் ஒருவனாகத் தன்னைக் கருதி அவர்க்குரிய இயல்பே தனக்குரிய இயல்பாகப் பிறழ நினைந்திருக்குங்காறும், அவன் அத்தீவினைகளினின்றும் அவற்றால்வருந் துன்பங்களினின்றும் ஒருசிறிதும் விடுபடான். மற்று அவன் தான் படுந்துன்பங்களின் முதல் தான்சேர்ந்த தீயோரின் சேர்க்கையால் வந்ததென்றும், அவரியல்பின் வழியே தன்னியல்பினைச் செலவிடுத்தது குற்றமாமென்றும் உணர்ந்து, அவரின் வேறாகத் தன்னைக் கருதி, அம்மட்டில் அமையாது நல்லார் குழுவிற் சேர்ந்து இனி அவர் தமக்குள்ள சிறந்த இயல்பே தனக்கும் உரியதாகற் பாலதெனக் கடைப்பிடித்து அவ்விழுமிய இயல்பிற்றன் கருத்தை நிறுத்தி அவ் வண்ணமாய் நின்றக்கால், அவனை முன்னே பற்றிய தீவினைகளும் அவற்றாற் றான்பட்ட துன்பங்களும் அவனை முற்றும் விட்டுப்போக, அவன் பின்னர்த் தான் சேர்ந்த நல்லாரியல்பே தன்னியல்பாய்க் கொண்டு அதனால்வரும் நல்லின்பத்திற் படிந்திருத்தல் காண்டு மன்றே! அது போலவே உயிர் தான் கட்டுண்டிருந்த ஆணவம் மாயை வினை என்னும் மும்மலப் பிணிப்பு அற்று நீங்கும் பொருட்டு, அவற்றினியல்போடு ஒன்றுபட்டு நில்லாது. சிவத்தினியல்போடு ஒருமித்து அதுவே தானாய் நிற்கும் நிலையில் இடையறாது பழகுதலே செயற்பாற்று; இவ் விடையறாப் பழக்கம் ஏறியபின் உயிரைப் பற்றிய மலத்தினியல்பு விட்டுப்போக சிவத்தினியல்பாய் நிற்கும்; மலம் அறுதற்பொருட்டுச் செயற்பாலதாகிய இப் பழக்கத்தினையே ஆசிரியர் திருமூல நாயனாரும்.

உயிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/60&oldid=1588317" இலிருந்து மீள்விக்கப்பட்டது