உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2 அம்மந்திரவுருவில் நின்று நோக்கிய வளவானே அவற்கேறிய நஞ்சு நீங்கிப் பிழைத் தெழுதல்போல, மும்மலமாகிய நஞ்சு ஏறிய எயிர் அம் மலப்பகையாகிய சிவத்தினியல்பை நினைந்து அதிற்றன் கருத்தை நிறுத்தி அவ்வண்ணமாய் நின்றவளவானே, அங்ஙனம் முனைத்த சிவத்தினியல்பிற்குமுன் மலத்தினியல்பு நிற்கமாட்டா தாய் வலிமடங்கி யொழிய உயிர் சிவமாயே நிற்குமென்பது தெளிவுறுத்தப்பட்டதாயிற்று. உயிர் தன்னால் நினைக்கப்பட்ட பொருளினியல்பைப்பெற்று அவ் வண்ணமாய் நிற்குமாற்றை இஞ்ஞான்றை மன நூலாரும்26 நாடோறும் நிகழும் உண்மை நிகழ்ச்சிகள் எண்ணிறந்தவற்றை எடுத்துக்காட்டிநன்கு விளக்குவர்.

இவ்வாறெல்லாம் முன்னர் மலங்களோ டொருங்கு சேர்ந்து அம்மலத்தினியல்பைப் பெற்று நின்றதூஉம், பின்னர்ச் சிவத்தோடொன்றுகூடி அச் சிவத்தினியல்பைப் பெற்றுச் சிவமாய் நிற்பதூ உம் உயிரேயல்லாமல், இயல்பாகவே மலங்களின் நீங்கிநின்று மலத்தாற் பற்றப்பட்ட உயிர்களை முத்தொழிற்கட்

படுத்துப் புனிதமாக்கிவருஞ் சிவம் அன்றாகலான், முழுமுதற் சிவமே மலங்களாற் பற்றப்பட்டு உயிராயிற் றென்பாருரையும், உயிர் மலங்களிற் றீர்ந்தவழி அம் முழுமுதற் சிவமேயாமல்லது உயிரென்று ஒரு தனிமுதல் இல்லையென்பாருரையும் உண்மைக்கு மாறான பொய்ம்மை யுரைகளாமென் றொழிக. இன்னும் இதனை விரிப்பிற் பெருகுமாதலின், இவ்வுண்மையின் பரப்பெல்லாம் எமது 'சிவஞானபோத ஆராய்ச்சி'யிற் கண்டுகொள்க.

மேலும், தம்மைப் பிணித்த பசுத்தன்மை பாசத் தன்மைகளை அறுத்து இறைவன் தனது திருவடிக் கண்ணே தம்மைப் பிணிப்பித்துக்கொண்ட வாற்றினையும், அவ்வாறு று செய்த அதுவே தம்மைச் சிவமாக்கியாண்டமை யாதலையுந் தெளித்து அடிகளே,

“பத்திமையும் பரிசும்இலாப் பசுபாசம் அறுத்தருளிப் பித்தன்இவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/62&oldid=1588319" இலிருந்து மீள்விக்கப்பட்டது