உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

எனவும்,

மறைமலையம் -23

“சித்தமலம் அறுவித்துச்

சிவமாக்கி எனை ஆண்ட

அத்தன்எனக்கு அருளியவாறு

ஆர்பெறுவார் அச்சோவே"28

எனவும் அருளிச்செய்தமை காண்க. அங்ஙனம் உயிர் சிவமாக்கப் பட்ட வழியும், அஃது இறைவனைப் போலப் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்னுந் தொழில்களைச் செய்யமாட்டாதாய், இறைவனது திருவடிப் பேரின்பத்திற் றிளைத்தபடியாய் ஆண்டவனுக்கு அடிமை யாகவே நிற்கப்பெறு மென்னும் உண்மை. “சிவம் ஆக்கி” என்றதனோடு அமையாது “எனை ஆண்ட என மேலும் இருசொற் றலைப்பெய்து, ஆண்டும் அவற்குத் தாம் அடிமைத் திறம் பேணிக்கிடக்கு மியல்பினை அடிகள் அருளிச் சய்தவாற்றால் நன்கு புலப்படும். இது சைவசித்தாந்தக் கொள்கையேயாதல், சிவஞானபோத முதனூலாசிரியராகிய மெய்கண்டதேவநாயனார்,

“ஒன்றலா, ஈறே முதல் அதனின் ஈறலா ஒன்றுபல வாறே தொழும்பாகும் அங்கு”

என்றும்,

66

29

""

அவைஅவன் அன்றில்லைப் பொன்ஒளிபோல் ஈசன் அவைஉடைமை ஆளாம்நாம் அங்கு

9930

என்றும் இருகால்ஓதி முடிந்த வீடுபேற்றின்கண்ணும் உயிர் சிவத்திற்கு அடிமையேயா மியல்பினை வற்புறுத்தியவாறு பற்றி உணர்ந்து கொள்க. வீடுபேறெய்திய உயிர் திருவருளின்ப நுகர்ச்சி யொன்றற்கே உரித்தாமல்லது. அஃது ஆண்டு இறைவற்குரிய ஐந்தொழிலுஞ் செய்யமாட்டாமை ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனார்க்கு முதன்மாணாக்கரான

அருணந்தி சிவனார்.

“செம்பிரத குளிகையினாற் களிம்பற்றுப் பொன்னாய்ச் செம்பொனுடன் சேரும்மலஞ் சிதைந்தாற் சீவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/63&oldid=1588320" இலிருந்து மீள்விக்கப்பட்டது