உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நம்பனுடன் கூடுமெனிற் பொன்போல் அல்லன்

2

55

நற்குளிகை போலஅரன் நணுகும்மலம் போக்கி அம்பொன் அடிக் கீழவைப்பன் அருங்களங்கம் அறுக்கும் அக்குளிகை தானும் பொன் ஆகா தாகும் உம்பர் பிரான் உற்பத்தி யாதிகளுக் குரியன்

உயிர்தானுஞ் சிவானுபவம் ஒன்றினுக்கும் உரித்தே

என்று அருளிச்செய்தமையாற் றுணியப்படும் என்க.

ஈண்டுக் காட்டியவாற்றால், 'சிவமாதல்', 'சிவமாக்குதல்', அணு அணுவாய்த் தேய்ந் தொன்றாதல்', 'பேதமின்மை', அத்துவிதம்' என்னுஞ் சொற்றொடர்களைக் கேட்டதுணை யானே அவற்றின் உண்மைப்பொருளை ஆராய்ந்து பாராமலும், அவை தம்மை வழங்கிய ஆக்கியோன் கருத்து இதுவென ஓராமலும், அவை தமக்கு மெய்ப்பொருளுரைத்த தொல்லாணை நல்லாசிரியர்களாகிய தெய்வத்திருமூலர், மெய்கண்டதேவர் என்னுஞ் சான்றோர் திருமொழிகளை ஒரு பொருட்படுத்தாமலும், மாயாவாதவழி யொன்றையே மெய்யெனத் தேறிய தமது மயக்கவறிவு கொண்டு காண்டு இச் சொற்றொடர்களுக்கு மாயாவாதப் L மாயாவாதப் பொருளையேற்றி, அவ்வாற்றால் மாணிக்கவாசகப் பெருமானை மாயாவாதி ஆக்க முயன்ற ‘தமிழ்வரலாறுடையார்' செயல் அறிஞராற் பெரிதும் அருவருத்தொதுக்கற்பாலதாமென விடுக்க, என்று

L

ஈண்டுக்காட்டிய பொருளே “இன்றெனக் கருளி" என்னுந் திருப்பாட்டுக்கு மெய்ப்பொருளாம்: இஃதிப்பொருட்டாதல் பற்றியன்றே சைவசித்தாந்த சந்தானாசிரியரான உமாபதி சிவனார் தமது சங்கற்ப நிராகரணத்தில் "திரண்டாம் பயனெனுந் திருவருள் தெளியிற்’, ‘சென்று சென் றுணுவாய்த் தேய்ந்துதேய்ந்தொன்றாம்; என்றிறையியற்கை யியம்புதல் தகுமே” என் றிச் செய்யுளையே எடுத்தோதி யருளிச்செய்தார். தாம் எழுதிய ‘தமிழ் வரலாறு' என்னும் புத்தகத்தில் அதன் ஆக்கியோர் எழுத்துப் பிழை சொற்பிழை சொற்றொடர்பிழை பொருட்பிழை முதலியன ாதுள் எழுதியமாட்டில் அமையாது. தாம் திருவாசகத்திலிருந்து எடுத்துக் காட்டிய தொரு மேற்கோளினையுந் "தந்ததென்றன்னைக் கொண்டதுன் றன்னை எனப் பிழைபட எழுதினார். இம் மேற்கோள்

""

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/64&oldid=1588321" இலிருந்து மீள்விக்கப்பட்டது